கடைசி ஆசை கூறாமலேயே நிர்பயா குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டனர் – தூக்கிலிட்டவருக்கு ரூ. 80,000 சம்பளம்..!

0

நிர்பயா பாலியல் வன்கொடுமை கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 4 பேருக்கும் திகார் சிறையில் இன்று அதிகாலை 5.30 மணிக்கு தூக்கிலிடப்பட்டனர்.

பாலியல் வன்கொடுமை..!

டில்லியில் கடந்த 2012 ம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் தேதி ஓடும் பேருந்தில் 23 வயது துணை மருத்துவ மாணவி நிர்பயாவை முகேஷ் சிங் (32), பவன் குப்தா (25), வினய் சர்மா (26), அக்ஷய் குமார் சிங் (31) ஆகிய நால்வரும் பாலியல் வன்கொடுமை செய்து சாலையில் தூக்கி வீசினர். பின்னர் அந்த மாணவி சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

குற்றவாளிகள்..!

இந்த வழக்கில் 6 பேர் குற்றவாளிகள். அவர்களில் ஒருவர் சிறுவர் ஆவார். அவர் சீர்த்திருத்தப் பள்ளிக்கு அனுப்பிவைக்கப்பட்டு 3 ஆண்டுகளுக்குப் பின் விடுதலை செய்யப்பட்டார். இன்னொரு குற்றவாளி நீதிமன்றத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்நிலையில் நான்கு பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

மனு தள்ளுபடி..!

மரண தண்டனைக்கு எதிராக சீராய்வு மனு, கருணை மனு என குற்றவாளிகள் தங்களுக்கான சட்டரீதியான அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தினர். எனினும், அவர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து செய்யப்படவில்லை. மரண தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை டில்லி உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் நேற்று நள்ளிரவு தள்ளுபடி செய்தது.

கடைசியாக தூக்கு..!

இதற்கு முன் 4 பேருக்கும் தூக்கிலிடும் தேதி மட்டும் இரண்டு முறை மாற்றியமைக்கப்பட்டு உள்ளன. இறுதியாக நால்வரும் இன்று அதிகாலை 5.30 மணிக்கு தூக்கிலிடப்பட்டனர்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here