கொரோனாவை வென்ற நியூசிலாந்து – 17 நாள் நோ கவுண்ட்..!

0
new Zealand corona virus
new Zealand corona virus

தற்போது உலக நாடுகள் அனைத்திலும் கோர தாண்டவம் ஆடி வரும் கொரோனா நியூசிலாந்து நாட்டில் இப்போதைய நேரத்தில் ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை என அந்நாடு அறிவித்துள்ளது. கடந்த 17 நாட்கள் நடந்த சோதனையில் ஒருவருக்கு கூட கொரோனா இல்லை.

நியூசிலாந்து

நியூசிலாந்து நாட்டில் பிப்ரவரி 28 இல் முதன் முதலில் கொரோனா தோற்று கண்டறிய பட்டது. அதிலிருந்து அந்நாட்டு அரசு தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதனால் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டது. மேலும் இதன் விளைவாகக் கடந்த 17 நாள் முன் வரை ஆயிரத்து 504 பேர் மட்டுமே நியூசிலாந்தில் கொரோனா காரணமாகப் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் 22 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தனர்.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

new Zealand corona virus
new Zealand corona virus

மேலும் அந்நாட்டில் 10 நாளைக்கு முன் இருந்து ஒருவர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகிறார். 50 வயதான அவருக்கு கொரோனா சிகிச்சை தீவிரமாக வழங்கப்பட்டது. மேலும் அவரும் குணமடைந்த நிலையில் தற்போது நியூசிலாந்து கொரோனா இல்லாத நாடக அறிவிக்கப்பட்டுள்ளது.

10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து – முக ஸ்டாலின் வலியுறுத்தல்..!

new Zealand corona virus
new Zealand corona virus

இது குறித்து நியூசிலாந்து சுகாதாரத் துறை அறிவித்ததாவது, “அக்லாண்ட் மாகாணத்தில் சிகிச்சை பெற்றுவந்த ஒருவர் 2 நாள் தனிமைப்படுத்தப்பட்டபின் இப்போது விடுவிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் எங்கள் நாடு கொரோனா இல்லாத நாடாக உருவெடுத்துள்ளது” இவ்வாறு கூறியிருந்தது

Jacinda  Ardern
Jacinda Ardern

இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ள நியூசிலாந்து, நாட்டில் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு முறை இனியும் தொடரும் என்றும் தெளிவுபடுத்தியுள்ளது. அதே வேளையில் நாட்டின் எல்லைப் பகுதியில் சில தளர்வுகளை நியூசிலாந்து அரசு மேற்கொண்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here