மருந்து கசப்பைப் போக்க மாணவர்களுக்கு லாலிபாப் திட்டம் – பறிபோன அமைச்சர் பதவி..!

0
lollipop
lollipop

மடகாஸ்கர் நாட்டில் மாணவர்களுக்கு வழங்கப்படும் கொரோனா மருந்தின் கசப்புத் தன்மையை மறக்க லாலிபாப் வழங்கும் திட்டத்தை கொண்டு வந்த அந்நாட்டின் கல்வித்துறை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார்.

லாலிபாப் திட்டம்:

ஆப்பிரிக்க நாடான மடகாஸ்கரில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. ஏற்கனவே கொரோனா வராமல் தடுக்க கோவிட் ஆர்கானிக்ஸ் என்கிற மூலிகை மருந்தை அந்நாட்டு ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து உள்ளனர். தற்போது நோய் பரவல் அதிகரித்து உள்ளதைத் தொடர்ந்து அந்த கசப்பான ஆர்கானிக்ஸ் மருந்து மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

தமிழகத்தில் பரவும் வீரியமிக்க புதிய கொரோனா வைரஸ்கள் – அச்சத்தில் விஞ்ஞானிகள்..!

மடகாஸ்கர் நாட்டின் கல்வித்துறை அமைச்சர் ரிஜாசோவா ஆண்ட்ரியமனனா மாணவர்களுக்கு வழங்கப்படும் மருந்தின் கசப்புத் தன்மையை மறக்க அதனுடன் சேர்த்து லாலிபாப் வழங்கும் திட்டத்தை அறிவித்து உள்ளார். இதற்கு இந்திய மதிப்பில் ரூ. 15 கோடி செலவிடப்படும் என தெரிவித்து இருந்தார். இந்த திட்டம் குறித்து அறிந்து அதிர்ச்சி அடைந்த மடகாஸ்கர் அதிபர், கல்வி அமைச்சரை பதவியில் இருந்து நீக்கி உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here