ரேஷன் கார்டில் குடும்ப தலைவராக ஆண் பெயர் இருந்தால் ரூ.1000 கிடையாதா?? வெளியான தகவல்!!!

0
ரேஷன் கார்டில் குடும்ப தலைவராக ஆண் பெயர் இருந்தால் ரூ.1000 கிடையாதா?? வெளியான தகவல்!!!
ரேஷன் கார்டில் குடும்ப தலைவராக ஆண் பெயர் இருந்தால் ரூ.1000 கிடையாதா?? வெளியான தகவல்!!!

தமிழகம் முழுவதும் உள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்ட நிலையில் அதற்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் முடிவில் பல்வேறு அறிவிப்புகள் வெளியானது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

அதன்படி உதவித்தொகைக்கு யார் யார் தகுதி உடையவர்கள், உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க என்னென்னலாம் தேவை என்பது குறித்து கூறியிருந்தனர். இந்நிலையில் சில ரேஷன் கார்டில் குடும்பத் தலைவிகளுக்கு பதிலாக குடும்ப தலைவர் பெயர் இருந்தால் ரூ.1000 உரிமைத் தொகை கிடைக்காது என சில தகவல்கள் வெளியானது. தற்போது இதற்கு தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. குடும்ப அட்டையில் இடம் பெற்றுள்ள ஒவ்வொருவரும் ஒரு குடும்பமாக தான் கருதப்படுவார்கள்.

அரசு ஊழியர்களுக்கு டபுள் ஹேப்பி., மாதாந்திர ஊதியம் இவ்வளவா? வெளியான முக்கிய அறிவிப்பு!!!

தகுதி வாய்ந்த அனைத்து குடும்ப தலைவிகளும் கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டில் ஆண் குடும்பத் தலைவராக குறிப்பிடப்பட்டிருந்தால் அந்த குடும்பத் தலைவரின் மனைவியும் குடும்பத் தலைவியாக கருதப்படுவர். அதே போன்று திருமணமாகாத தனித்த பெண்கள், கைம் பெண்கள், திருநங்கைகள் இருந்தால் அவர்களும் குடும்பத் தலைவியாக கருதப்படுவார் என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here