காந்தாரா படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட பட குழு.., குஷியில் ரசிகர்கள்!!

0
காந்தாரா படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட பட குழு.., குஷியில் ரசிகர்கள்!!
காந்தாரா படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட பட குழு.., குஷியில் ரசிகர்கள்!!

கன்னட மொழியில் உருவாக்கப்பட்ட படம் தான் ” காந்தாரா”. இப்படத்தில் கன்னட இயக்குநரும், நடிகருமான ரிஷப் செட்டி இயக்கி நடித்து, தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் செப்டம்பர் 30 அன்று வெளிவந்துள்ளது. இப்படம் வெளியானதை தொடர்ந்து ஒருபக்கம் பல்வேறு விதமான சர்ச்சைக்கு உட்பட்டிருந்தாலும், வசூல், 200 கோடியை தாண்டியுள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இப்படத்தில் இயக்குனரான ரிஷப் செட்டி சொல்லியுள்ள கருத்து இந்து மதத்திற்கு எதிரானது என்று பல்வேறு தரப்பினரால் கூறப்பட்டு வருகிறது. ஆனால் அதை இயக்குனர் மறுத்து வருகிறார். இக்கதை கர்நாடக மக்களின் நம்பிக்கையான வழிபாடுகள் மற்றும் சடங்குகளை மட்டுமே உணர்த்துகிறது என்றும், இப்படம் எந்த விதத்திலும் இந்து மதத்தை தவறாக காட்ட வில்லை என்றும் தனது கருத்தை தொடர்ந்து கூறிவருகிறார்.

மீண்டும் ஓரங்கக்கட்டப்பட்ட விஜய் டிவி.., இனிமேல் டாடா கட்டிட்டி போக வேண்டியது தான்.., ஆப்பு வைத்த பிரபல சேனல்!!

மேலும் இப்படம் ரசிகர்களாலும், சக நடிகர்களாலும், தொடர்ந்து நல்ல கருத்தை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. ரிஷப் செட்டியின் இந்த அவதாரம், மொழியை கடந்து, இனத்தை கடந்து பலதரப்பட்ட மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் காந்தாரா இன்று அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளிவரவுள்ளது என இப்படகுழுவினர்கள் அறிவித்துள்ளதற்கு, இப்படத்தை ஓடிடியில் பார்ப்பதற்கு மக்களிடையே எதிர்பார்ப்பும், மகிழ்ச்சியும் சற்று அதிகரித்து உள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here