தவானை நீக்கி கே எல் ராகுல் கேப்டன் ஆனதுக்கு இது காரணம்…, வெளியான உண்மை தகவல்!!

0
தவானை நீக்கி கே எல் ராகுல் கேப்டன் ஆனதுக்கு இது காரணம்..., வெளியான உண்மை தகவல்!!
தவானை நீக்கி கே எல் ராகுல் கேப்டன் ஆனதுக்கு இது காரணம்..., வெளியான உண்மை தகவல்!!

ஜிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் தொடரில், கே எல் ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டதற்கு இது காரணம் என தவான் கூறியுள்ளார்.

தவான்:

இந்திய அணி நாளை முதல், நியூசிலாந்துக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை விளையாட இருக்கிறது. இந்த தொடர்கள் முறையை, 25, 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கிறது. இதற்கான இந்திய அணியை, தவான் வழி நடத்த உள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இவரது தலைமையின் கீழ் விளையாடிய தொடர்களை எல்லாம் இந்திய அணி வென்றுள்ளது என்பதால், நியூசிலாந்துக்கு எதிரான தொடரையும் இந்தியா கைப்பற்றும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஒருநாள் போட்டிகளுக்கு கேப்டன் ஆனது குறித்து தவான் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். அதில், இந்திய அணிக்கு கேப்டனாக வாய்ப்பு கிடைத்ததை பெரும் அதிர்ஷ்டமாக நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.

ஒரே போட்டியில் 7 கோல்கள்…, அள்ளி குவித்த ஸ்பெயின்…, தொடக்கமே அபாரம்!!

ஜிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் தொடரில், தவானுக்கு பதில் காயத்தில் இருந்து மீண்ட கே எல் ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார். இது குறித்து பேசிய தவான், ஜிம்பாப்வே தொடருக்கு பிறகு ஆசிய கோப்பை வந்தது. இதற்கான இந்திய அணியில், கேப்டனான ரோஹித் சர்மாவுக்கு ஒருவேளை காயம் ஏற்பட்டால், கே எல் ராகுல் தான் அந்த இடத்தை நிரப்ப வேண்டும். அதற்கு பயிற்சி பெறும் வகையில் தான், ஜிம்பாப்வேக்கு எதிரான தொடரில் கே எல் ராகுல் நியமிக்கப்பட்டிருந்தார் என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here