ஒரே போட்டியில் 7 கோல்கள்…, அள்ளி குவித்த ஸ்பெயின்…, தொடக்கமே அபாரம்!!

0
ஒரே போட்டியில் 7 கோல்கள்..., அள்ளி குவித்த ஸ்பெயின்..., தொடக்கமே அபாரம்!!
ஒரே போட்டியில் 7 கோல்கள்..., அள்ளி குவித்த ஸ்பெயின்..., தொடக்கமே அபாரம்!!

FIFA உலக கோப்பை தொடரில் எதிரணியை ஒரு கோல் கூட அடிக்கவிடாமல், ஸ்பெயின் அணி 7 கோல்கள் அடித்து வெற்றியுடன் தொடரை தொடங்கியது.

FIFA உலக கோப்பை:

FIFA உலக கோப்பை கால்பந்து தொடரின் முதல் லீக் சுற்றுகள் கத்தாரில் நடைபெற்று வருகின்றன. இந்த லீக் சுற்றில், குரூப் E யில் இடம்பெற்றுள்ள ஜப்பான் மற்றும் ஜெர்மனி அணிகள் மோதின. இதில், ஆட்டத்தின் முதல் பாதியில், ஜெர்மனி அணிக்கு கிடைத்த பெனால்டி கிக்கை சரியாக பயன்படுத்தி இல்கே குண்டோகன் கோல் ஒன்றை அடித்தார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதன் மூலம், முதல் பாதியில், ஜெர்மனி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது. இதையடுத்து, தொடங்கிய 2வது பாதியில், ஜப்பான் அணி வீரர்கள் வேகம் காட்ட ஆரம்பித்தனர். இந்த வேகத்தால், 75 மற்றும் 83 வது நிமிடத்தில் இரு கோல்கள் அடித்து, ஜப்பான் அணி 2-1 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியை தொடர்ந்து, குரூப் E யில் ஸ்பெயின் மற்றும் கோஸ்ட்டா ரிக்கா அணிகள் மோதின.

முதலிடத்தை தொடர்ந்து தனதாக்கி வரும் புனேரி பல்டன்…, குவியும் வெற்றிகளால் ரசிகர்கள் மகிழ்ச்சி!!

இதில், ஆரம்ப முதல் ஆதிக்கம் செலுத்திய ஸ்பெயின் அணி, எதிரணியை ஒரு கோல் கூட அடிக்க விடாமல் தடுத்தது. ஆனால், ஸ்பெயின் அணி தொடர் தாக்குதலை மேற்கொண்டு, 7 கோல்களை அடித்து போட்டியை வென்றது. இதன் மூலம், குரூப் Eயில் ஸ்பெயின் அணி முதலிடத்திலும், ஜப்பான், ஜெர்மனி மற்றும் கோஸ்ட்டா ரிக்கா அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here