முழுக்க முழுக்க இந்தியாவில் உருவாக்கப்பட்ட கொரோனாவின் வகைகளை கண்டுபிடிக்கும் புதிய கருவி!! இந்திய விஞ்ஞானிகள் அசத்தல்!!!

0

நாளுக்கு நாள் பல்வேறு வகையான கொரோனா வைரஸ்களை மருத்துவ விஞ்ஞானிகள் கண்டுபிடித்த வண்ணம் உள்ளனர். தற்போது இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் செயல்படும் ஸ்ரீ சித்திர திருநாள் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் கொரோனா வைரஸின் பல்வேறு வகைகளை கண்டுபிடிக்கும் புதிய ஆர்டி-பிசிஆர் (RT-PCR) சோதனைக் கருவியை  உருவாக்கியுள்ளது.

கொரோனா வைரஸை கண்டறிவதற்காக இந்த புதிய பலமுனை ஆர்டி-பிசிஆர் சோதனை முறை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஆர்டிஆர்பி மற்றும் ஓஆர்எஃப்பி – என்எஸ்பி14 ஆகிய 2 சார்ஸ்-கோவி 2 மரபணுக்களையும் மனித ஆர்என்ஏஎஸ்ஈபி மரபணுவையும் இந்த முறையில் பரிசோதிக்கப்படுவதாகவும், மேலும் இதன்மூலம் பல்வேறு வைரஸ் வகைகளைக் கண்டறிய முடியும் என மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை கூறியுள்ளது

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழு, இது 97.3 சதவீதம் உணர் திறனுடனும் கொரோனாவைக் கண்டறிவதில் 100 சதவீதம் செயல் திறனுடனும் இருப்பதாக சான்றளித்துள்ளது. அதோடு  ஸ்ரீ சித்திர திருநாள் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் இந்த கருவிக்காக ஹைதராபாத்தை சேர்ந்த ஹுவெல் லைப் சயின்சஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.


கொரோனாவிற்கு எதிராக உலக நாடுகள் போராடிக்கொண்டிருக்கும் வேலையில் இந்நோயின் வகைகளை அறிந்துகொண்டு  செயல்படுவது மருத்துவ உலகில் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. மேலும் வெளிநாடுகளை நாடாமல் இந்திய விஞ்ஞானிகள் இந்த ஆர்டி-பிசிஆர் சோதனைக் கருவியை  உருவாக்கியுள்ளது பாராட்டுகளை பெற்று வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here