‘எனக்கு இப்படிப்பட்ட படமே வேண்டாம்’ – அதிரடி முடிவில் குக் வித் கோமாளி பிரபலம்!!

0
எதிர்பாராத நேரத்தில் திருமண அறிவிப்பை வெளியிட்ட குக் வித் கோமாளி பிரபலம் - வாழ்த்துகளைக் குவிக்கும் ரசிகர்கள்!!

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் அம்மா என்ற அந்தஸ்த்தை பெற்ற நடிகை ஷகிலா தற்போது தனக்கு வந்த படவாய்ப்பினை மறுத்துள்ளார். தற்போது அதுகுறித்து விளக்கமளித்துள்ளார் ஷகிலா.

ஷகிலா:

சினிமா உலகில் கவர்ச்சி நாயகியாக வலம் வந்தவர் தான் ஷகிலா. இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் பல படங்களை நடித்துள்ளார். இந்நிலையில் இவர் தனியார் தொலைக்காட்சியில் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்றார். இவர் என்னமோ இந்த நிகழ்ச்சியில் எதார்த்தமாக தான் பங்கேற்றார். ஆனால் இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் ஷகிலாவின் மரியாதையை வானளவிற்கு உயர்த்தியது.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

மேலும் இந்த நிகழ்ச்சியில் புகழ், பாலா, மணிமேகலை, ஷிவாங்கி என அனைவரும் ஷகிலாவை அம்மா என்று அழைத்து வந்தார்கள். இதன் மூலம் ஷகிலா ரசிகர்கள் மத்தியிலும் அம்மா என்ற அந்தஸ்தை பெற்றார். இணையத்தை திறந்தாலே ஷகிலாவை அம்மாவாக வர்ணித்து புகழ்ந்து வருகிறார்கள் ரசிகர்கள். அந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் இவர் அதிக வரவேற்பை பெற்றுள்ளார்.

தடுப்பூசி செலுத்திக்கொண்ட முன்னாள் விஜய் டிவி பிரபலம் – வைரலாகும் புகைப்படம்!!

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் தற்போது ஷகிலா தனக்கு வந்த படவாய்ப்பினை மறுத்துள்ளார். தற்போது அதுகுறித்து அவர் விளக்கமளித்துள்ளார். அதன்படி அவர் கூறியதாவது, தற்போது ரசிகர்கள் என்னை அம்மாவாக பார்க்கிறார்கள். ஆனால் எனக்கு வந்த படவாய்ப்பில் குளிக்கும் சீன் ஒன்று இருந்தது. இதன் காரணமாக நான் இதனை மறுத்துவிட்டேன் என்று தெரிவித்தார். தற்போது இந்த தகவல் அவரது ரசிகர்களை நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here