வாகன ஓட்டிகள் கவனத்திற்கு.., சாலை விபத்துகளை குறைக்க அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை!!!

0
வாகன ஓட்டிகள் கவனத்திற்கு.., சாலை விபத்துகளை குறைக்க அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை!!!
தமிழக மட்டுமல்லாமல் அனைத்து மாநிலங்களிலும் சாலை விபத்துகளை தடுக்க அந்தந்த மாநில அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பஞ்சாப் மாநில அரசு சாலை விபத்துகளை குறைக்க சதக் சுரக்யா இயக்கம் என்ற புதிய திட்டத்தை அமல்படுத்தியுள்ளனர். இதன் மூலம் 144 இலகு ரக வாகனங்களும், 5000 பணியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். சாலைகளில் 30 கிலோமீட்டர் தூரத்திற்கு ஒரு வாகனம் நிறுத்தப்பட்டிருக்கும்.
இந்த வாகனத்தில் மூலம் அதிநவீன கருவிகளை கொண்டு போக்குவரத்து விதிகளை பின்பற்றாமல் வாகனங்களை இயக்குவதை எளிதில் கண்டுபிடித்து விடலாம்.  ஒரு வேலை எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டால் இந்த வாகனத்தில் அடிபட்டவர்களை காப்பாற்ற தேவையான முதலுதவி பெட்டிகள் உள்ளனர். மேலும் ஒரு சாலை விபத்துகளால் ஒரு நாளைக்கு 18 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பதாகவும், மாதந்தோறும் 500 பேர் வரை உயிரிழப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் இதை தடுக்க தான் தற்போது இது போன்ற திட்டத்தை அமல்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here