டிச.19 முதல் ஊரடங்கில் புதிய தளர்வுகள் – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு!!

0
TamilNadu CM
TamilNadu CM

தமிழகத்தில் உரிய முன் அனுமதி பெற்று 50% பங்கேற்பாளர்களுடன் டிச.19 முதல் திறந்த வெளியில் அரசியல், மத கூட்டங்கள் நடத்தலாம் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

புதிய தளர்வுகள்:

டிச. 19 ம் தேதி முதல் உரிய முன் அனுமதி பெற்று திறந்த வெளியில் அரசியல், மத சார்ந்த கூட்டங்கள், கலை நிகழ்ச்சிகள் போன்றவை 50% பங்கேற்பாளர்களுடன் நடத்தலாம் என்று முதல்வர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

கொரோனா நோய்த்தொற்று காரணமாக தமிழகம் முழுவதும் 25.3.2020 முதல் ஊரடங்கு சட்டத்தை தமிழக அரசு நடைமுறையில் வைத்துள்ளது. இதன் காரணமாக பொது மக்கள் கூட்டமாக கூடும் வகையில் உள்ள திரையரங்கம், அரசியல் கூட்டங்கள், கலை நிகழ்ச்சிகள், மதக்கூட்டங்கள் போன்றவை நடைபெறுவதற்கு அரசு தடை விதித்து உள்ளது. இதனால் இதுபோல் எந்த நிகழ்ச்சிகளும் நடைபெறவில்லை.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் முதல்வர் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது.” கொரோனா நோய்த்தொற்றை தடுப்பதற்காக மத்திய அரசின் வழிமுறையின் படி ,தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் 25.3.2020 முதல் தமிழகத்தில் சில தளர்வுகளுடன் ஊரடங்கு முறை பின்பற்றப்படுகிறது.

அ.தி.மு.க அரசு மக்களை நோய்த்தொற்றில் இருந்து பாதுகாத்து கொரோனா கொள்ளை நோயை கட்டுக்குள் வைத்துள்ளது. இது பொது மக்களின் சிறந்த ஒத்துழைப்பினால் மட்டுமே சாத்தியமாயிற்று.

உள்ளரங்கு கூட்டங்களுக்கு அனுமதி அளித்துள்ள நிலையில் தற்போது நிலையான வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி திறந்தவெளியில் அதன் அளவிற்கு அதிகபட்சமாக 50% எண்ணிக்கையை தாண்டாமல் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் முதாயம், அரசியல், விளையாட்டு, கலை, பொழுதுபோக்கு மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் 19.12.2020 முதல் உரிய முன் அனுமதி பெற்று நடத்திக் கொள்ளலாம். முன் அனுமதி பெறுவதற்கு மாவட்ட ஆட்சியாளரிடமும், சென்னையில் மாநகர காவல்துறை ஆணையாளரிடமும் அணுக வேண்டும்.

அண்ணா பல்கலை மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி!!

பொதுமக்கள் தேவை இல்லாமல் பொது இடங்களில் கூடுவதை தவிர்க்க வேண்டும். அவசியமான விஷயங்களுக்கு மட்டும் வெளியில் செல்ல வேண்டும். அப்படி வெளியில் செல்லும் போது பொதுமக்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து, தகுந்த சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். அடிக்கடி சோப்பை பயன்படுத்தி கைகளை நன்றாக கழுவ வேண்டும்.

இவ்வாறு அரசின் கோரிக்கையை ஏற்று பொது மக்கள் கவனமுடன் செயல்பட்டால் மட்டுமே கொரோனாநோய்த்தொற்றை முழுவதுமாக கட்டுக்குள் வைக்க முடியும். எனவே பொது மக்களின் நலனிற்காக அரசு எடுத்து வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்திற்கும் மக்கள் தங்கள் முழு ஒத்துழைப்பையும் வழங்குமாறு மிகவும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” என்று மூத்தவர் பழனிச்சாமி கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here