ரெஸ்டாரண்ட் ஸ்பெஷல் மயோனஸ் சிக்கன் சாப்டிருக்கீங்களா?? நீங்களே ஈஸியா வீட்டில் சமைக்கலாம்!

0
ரெஸ்டாரண்ட் ஸ்பெஷல் மயோனஸ் சிக்கன் சாப்டிருக்கீங்களா?? நீங்களே ஈஸியா வீட்டில் சமைக்கலாம்!
ரெஸ்டாரண்ட் ஸ்பெஷல் மயோனஸ் சிக்கன் சாப்டிருக்கீங்களா?? நீங்களே ஈஸியா வீட்டில் சமைக்கலாம்!

எப்பவும் சிக்கன் வாங்குனா சிக்கன் ப்ரை, சிக்கன் கிரேவி, சிக்கன் 65 னு சமைக்கலாம் ஒரு தடவை இப்படி மயோனஸ் சிக்கன் சமைத்து பாருங்கள்.

தேவையான பொருட்கள்:
  • சிக்கன் – 1/2
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
  • மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
  • மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
  • மிளகு தூள் – 1 டீஸ்பூன்
  • தயிர் – 1 டீஸ்பூன்
  • பெரிய வெங்காயம் – 4
  • தக்காளி – 3
  • பச்சை மிளகாய் – 3
  • கொத்தமல்லி – சிறிதளவு
  • மல்லி தூள் – 2 டீஸ்பூன்
  • ரீபண்ட் ஆயில் – 1/2 லிட்டர்
  • மயோனஸ் – 1 கப்‌

செய்முறை விளக்கம்:

மயோனஸ் சிக்கன் ரெசிபி செய்வதற்கு சிக்கனை நன்கு சுத்தமாக கழுவி சிறு துண்டாக நறுக்கி கொள்ள வேண்டும். அத்துடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், பெப்பர் சேர்த்து கொள்ளவும். பிறகு அதோடு ஒரு டீஸ்பூன் தயிர் மற்றும் ஒரு முட்டை சேர்த்து அரை மணி நேரம் சிக்கனை ஊற விடவும்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

பிறகு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி, மசாலா சேர்த்து வைத்துள்ள சிக்கனை எடுத்து அதில் போட்டு பொரித்து எடுத்துக் கொள்ளவும். பின் மற்றொரு கடாய் எடுத்து அதை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

முதல் நாளே வேலையை காட்டிய பிக் பாஸ்.,4 ஹவுஸ் மேட்டுக்கு ஸ்கெட்ச் போட்டாச்சு! யார் தெரியுமா?

பிறகு அதில் நறுக்கி வைத்துள்ள தக்காளி, பச்சை மிளகாய், சேர்த்து நன்றாக வதக்கவும். இத்துடன் நாம் எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்துள்ள சிக்கனை சேர்த்து நன்றாக கிளறி விடவேண்டும். அதோடு ஒரு கப் மயோனஸ் சேர்த்து பத்து நிமிடம் அடுப்பில் வைத்துக் கொதிக்க விட்டு, பிறகு அடுப்பை ஆப் செய்யவும். இப்போ நமக்கு சுவையான மயோனஸ் சிக்கன் ரெசிபி ரெடி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here