முதல் நாளே வேலையை காட்டிய பிக் பாஸ்.,4 ஹவுஸ் மேட்டுக்கு ஸ்கெட்ச் போட்டாச்சு! யார் தெரியுமா?

0
முதல் நாளே வேலையை காட்டிய பிக் பாஸ்.,4 ஹவுஸ் மேட்டுக்கு ஸ்கெட்ச் போட்டாச்சு! யார் தெரியுமா?
முதல் நாளே வேலையை காட்டிய பிக் பாஸ்.,4 ஹவுஸ் மேட்டுக்கு ஸ்கெட்ச் போட்டாச்சு! யார் தெரியுமா?

பிக் பாஸ் நிகழ்ச்சியில், இந்த வாரத்திற்கான முதல் நாளில் இந்த வார எலிமினேஷனுக்கு நாமினேட் செய்யுமாறு, போட்டியாளர்களுக்கு பிக்பாஸ் டாஸ்க் கொடுத்துள்ளார்.

முதல் டாஸ்க்:

விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சி கிட்டத்தட்ட 60 நாட்களை தாண்டி, வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த போட்டியில் கடந்த வாரம், ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்தது போலவே டபுள் எலிமினேஷன் இருந்தது. அதேபோல் முதல் நாள் ராம் மற்றும் நேற்றைய எபிசோடில் ஆயிஷா ஆகிய 2 பேர் வெளியேற்றப்பட்டனர். தற்போது வீட்டில் 11 பேர் வரை இருக்கின்றனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இவர்களில் இந்த வாரத்திற்கான முதல் நாளான இன்று, வார இறுதியில் எலிமினேஷன் செய்வதற்கான போட்டியாளர்களை கன்பர்சன் ரூமில், வந்து நாமினேட் செய்யுமாறு பிக் பாஸ் கூறியுள்ளார். அதன்படி போட்டியாளர்கள் அனைவரும் பெரும்பாலும் மணிகண்டன், விக்ரமன், அசீம் மற்றும் ரக்ஷிதா ஆகியோர் பெயரையே குறிப்பிடுகின்றனர்.

கார்த்திக் சுப்புராஜின் ஜிகர்தண்டா 2 டீசர் வெளியீடு.., படு மாஸாக ஆரம்பித்த ஷூட்டிங்!!

இதில் எதிர்பாராத ஒன்று என்னவென்றால், இதுவரை குரூப்பாக சேர்ந்து கேம் விளையாடி வந்த மைனா மற்றும் மணிகண்டன் இடையே பிளவு ஏற்பட்டுள்ளது. மைனா எலிமினேஷனுக்கு மணிகண்டன் பெயரை குறிப்பிட்டுள்ளார். இதனால் இனி வரும் எபிசோடுகளில் இவர்கள் இருவருக்கும் இடையே உச்சகட்ட போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here