நீட் தேர்வு முடிவுகள் 2020 இன்று வெளியீடு – எப்படி தெரிந்து கொள்வது??

0

கொரோனா பரவலுக்கு மத்தியில் மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வினை இந்த ஆண்டு ரத்து செய்யக்கோரி வைக்கப்பட்ட கோரிக்கைகளை நிராகரித்த மத்திய அரசு செப்டம்பர் 13 ஆம் தேதி தேர்வினை நடத்தியது. இதில் நாடு முழுவதும் 14.37 லட்சத்துக்கும் மேற்பட்ட தேர்வர்கள் பங்கேற்றதாக மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அவர்கள் தெரிவித்தார்.

நீட் தேர்வு முடிவுகள்:

அக்டோபர் 16ம் தேதி நீட் யுஜி 2020 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் எனவும் அதற்கான சரியான நேரம் பின்னர் தெரிவிக்கப்படும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அவர்கள் ஏற்கனவே அறிவித்து இருந்தார். மேலும் தேர்வர்களுக்கு தனது வாழ்த்துக்களையும் அவர் தெரிவித்தார்.

எப்படி தெரிந்து கொள்வது??

nta.ac.in, ntaneet.nic.in ஆகிய வலைத்தளங்களில் கீழ்கண்ட வழிமுறைகளை பின்பற்றி தேர்வர்கள் தங்களது முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

1. அதிகாரப்பூர்வ வலைத்தளமான ntaneet.nic.in க்கு செல்லவும்.

2. அதில், ‘NEET (UG) – 2020 Result’ என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.

3. உங்கள் நீட் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட்டு சமர்ப்பிக்க வேண்டும்.

4. நீட் 2020 முடிவுகள் அப்போது உங்கள் திரையில் வெளியாகும்.

5. அதனை பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்ளலாம்.

இந்தியாவில் மருத்துவப் படிப்புகளில் சேர நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இதில் பொது பிரிவினர் குறைந்தது 50 சதவிகித மதிப்பெண் மற்றும் எஸ்சி / எஸ்டி / ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர்கள் 40 வது சதவீத மதிப்பெண்களை பெற்றால் தேர்ச்சி பெறலாம். கொரோனா தொற்றுநோயால் ரத்து செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளுக்கு மத்தியில், செப்டம்பர் 13ம் தேதி பல்வேறு கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு மத்தியில் தேர்வு நடைபெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here