Friday, March 29, 2024

வேலூர் முதன்மை பொறியாளர் வீட்டில் ரெய்டு – ரூ.3.58 கோடி ரொக்கம், 3 கிலோ தங்கம் பறிமுதல்!!

Must Read

வேலூர் மண்டலத்தின் முதன்மை பொறியாளரின் வீட்டில் கணக்கில் காட்டப்படாத பல கோடி ரூபாய் ரொக்கம், கிலோ கணக்கில் தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

முதன்மை அதிகாரி வீட்டில் சோதனை:

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் வேலூர் மண்டலத்தின் சுற்றுசூழல் இணை முதன்மை பொறியாளராக பணிபுரிபவர், பன்னீர் செல்வம். 51 வயதாகும் இவரது கட்டுப்பாட்டில் வேலூர், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம் மற்றும் திருப்பத்தூர் போன்ற மாவட்டங்கள் உள்ளன. இந்த மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகளுக்கு அங்கீகாரம் வழங்குவது போன்ற பல பணிகளை இவர் பார்த்து வந்துள்ளார். இவர் பல லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

அதனால், காட்பாடி கத்தி நகரில் உள்ள அவரது வீட்டிலும் அவரது வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்திலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவர் வருமான வரி துறையினரிடம் கணக்கில் காட்டப்படாத 3.58 கோடி ரூபாய், 3.6 கிலோ தங்க நகைகள் (450 பவுன்) மற்றும் 6.50 கிலோ வெள்ளி பொருட்கள் போன்றவை போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.

ராக்கெட் வேகத்தில் உயர்ந்த தங்கத்தின் விலை – பொதுமக்கள் அதிர்ச்சி!!

இந்த சோதனை புதன் கிழமை பகல் 12 மணிக்கு தொடங்கி இரவு வரை நடைபெற்றது. அதே போல் பல கோடி ரூபாய் மதிப்புள்ள 90க்கும் மேற்பட்ட சொத்து பத்திரங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

குற்றவியல் நடவடிக்கை:

இப்படி பல கோடி ரூபாய் சொத்து மற்றும் பொருட்களை கணக்கில் கட்டாததால் அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்துள்ளனர். அவர் மீது முறையாக வழக்கு தொடரப்படும் என்றும், விசாரணை நடைபெறும் என்றும் போலீஸ் தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

SBI வங்கி வாடிக்கையாளர்களே.., உடனடியாக இந்த பணியை முடிக்க வேண்டும்.., இல்லனா சிக்கல் ஆகிவிடும்!!!

நாடு முழுவதும் அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளில் நிகழும் மோசடிகளை தடுக்க வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -