இனி ஆண்டுக்கு இரண்டு முறை நீட் தேர்வு – சுகாதார அமைச்சகம் ஒப்புதல்!!

0

மாணவர்களின் மனஉளைச்சலை போக்கவும் அவர்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு இனி ஆண்டுக்கு இரண்டு முறை நீட் தேர்வு நடைபெறும் என்றும் இந்த திட்டம் இந்த ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நீட் தேர்வு

கடந்த 2019ம் ஆண்டு முதல் ஜேஇஇ தேர்வை ஆண்டுக்கு இருமுறை நடத்த அரசு அறிவித்தது. மாணவர்களின் மனஉளைச்சலை குறைப்பதற்காக தான் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது என்று தெரிவித்துள்ளனர். இந்த தேர்வு ஐஐடி, என்ஐடி மற்றும் என்என்ஐடி ஆகிய உயர் கல்வி தொழில்நுட்ப நிலையங்களில் சேருவதற்காக இந்த நுழைவு தேர்வு நடத்தப்படும். இதேபோல் மருத்துவ படிப்புக்கான நுழைவு தேர்பாக நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வு ஆண்டுக்கு ஒரு முறை தான் நடத்தப்படுகிறது. இதனால் மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் அந்த 1 தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றால் மறு தேர்வு வரும் வரை மாணவர்கள் காத்திருக்கும் நிலை ஏற்படும். இதனால் மாணவர்கள் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகினர். தற்போது இதனை கருத்தில் கொண்டு சுகாதாரத்துறை அமைச்சகம் ஓர் முடிவை எடுத்துள்ளது. அதன்படி இந்த ஆண்டு முதல் ஆண்டுக்கு நீட் தேர்வு இருமுறை நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது. மேலும் மாணவர்கள் இரண்டு தேர்வுகளையும் எழுதலாம் என்றும் அதில் எதில் அதிக மதிப்பெண்கள் உள்ளதோ அதை தேர்வு செய்து கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் – புள்ளிப்பட்டியலில் இங்கிலாந்து அணி முன்னேற்றம்!!

தற்போது இது குறித்து பேசிய தேசிய தேர்வுகளை நடத்தும் அதிகாரி கூறுகையில், மாணவர்களின் மனஉளைச்சலை போக்கவும், தேர்வை சிறந்த முறையில் மாணவர்கள் எதிர்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் தான் ஆண்டுக்கு இரண்டு முறை தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை தேர்வுகள் முகமை அதிகாரிகளின் ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. மேலும் இந்த ஆண்டில் 10 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் நீட் தேர்வை எழுதலாம் என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here