ஓஹோ.. அப்போ இதுக்காக தான் நயன் விக்கியை திருமணம் செய்தாங்களோ – தீயாய் பரவும் தகவல்!

0
ஓஹோ.. அப்போ இதுக்குத்தான் நயன் விக்கியை திருமணம் செய்தாங்களோ - தீயாய் பரவும் தகவல்!

விக்னேஷ் சிவன் நயன்தாரா தங்கள் இரண்டாம் ஹனிமுனை கொண்டாடி முடித்துள்ள நிலையில் இவர்களை பற்றிய சுவாரசிய தகவல் வெளியாகியுள்ளது.

விக்னேஷ் சிவன் நயன்தாரா:

தமிழ் ரசிகர்களின் மனதிற்கு பிரியப்பட்டவர்கள் நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடி. இதற்கு முக்கிய காரணம் இவர்கள் சாதாரண கலைஞர்களாக தொடங்கி தற்போது முன்னணி நட்சத்திரங்களாக வளரும் வரை ரசிகர்கள் இவர்களின் பயணத்தில் உடன் இருந்துள்ளனர். நானும் ரவுடி தான் படத்தில் ஆரம்பித்த இவர்களின் காதல் பயணம் ஜூன் மாதம் திருமணத்தில் முடிந்தது.

முன்னணி நடிகையான நயன்தாரா வளர்ந்து வரும் இயக்குனர் ஆன விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துள்ளது ரசிகர்களுக்கு ஆச்சிரியத்தையே ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் தமிழ் நாட்டில் நடத்தப்பட்ட செஸ் விளையாட்டு போட்டியை விக்னேஷ் சிவன் தான் இயக்கி இருந்தார். மிக சிறப்பாக பணியாற்றி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் விக்னேஷ் சிவன்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதை சிறப்பிக்கும் விதமாக தமிழக அரசு அவரை கௌரவித்தது. அந்த நிகழ்ச்சியில் தனக்கு சரியான அங்கீகாரம் கிடைக்க போராடியதை நினைத்து கண்கலங்கியுள்ளார். மேலும் தனது தாயாரையும் மேடையில் அழைத்து பெருமைப்படுத்தி உள்ளார். ரசிகர்கள் பலரும் கஷ்டப்பட்டு கடின உழைப்பு போட்டு அவர் வளர்ந்து வருகிறார். ஒருவேளை நயன்தாராவுக்கு இந்த பண்பு தான் விக்னேஷ் சிவனிடம் மிகவும் பிடித்திருக்கும் என்பது போன்ற கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here