எல்லாரும் தோனி ஆகிட முடியாது – ரோஹித்தை சாடிய பாகிஸ்தான் வீரர் முகமது ஹபீஸ்!

0
எல்லாரும் தோனி ஆகிட முடியாது - ரோஹித்தை சாடிய பாகிஸ்தான் வீரர் முகமது ஹபீஸ்!
எல்லாரும் தோனி ஆகிட முடியாது - ரோஹித்தை சாடிய பாகிஸ்தான் வீரர் முகமது ஹபீஸ்!

ஆசிய கோப்பை தொடரில் ஹாங்காங் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ரோகித் மிகவும் பலவீனமாகவும், குழப்பமாகவும் இருந்ததாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் முகமது ஹபீஸ் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் முன்னாள் வீரர்!

இந்திய அணியின் அனைத்து வடிவங்களிலான தொடர்களிலும் ரோகித் சர்மா தற்போது சிறந்த கேப்டனாக அணியை வழிநடத்திச் பல வெற்றிகளை குவித்துள்ளார். அதன்படி தற்போது நடைபெற்று வரும் ஆசிய கோப்பை தொடரில் கூட இந்திய அணி தொடர் வெற்றியை கண்டு வருகிறது. இதன் மூலம் இந்திய அணி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் முகமது ஹபீஸ் ரோகித் சர்மா கேப்டன்சி பற்றி சில கருத்துக்களை கூறியுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதாவது ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பாகிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிக்கு எதிரான இரண்டு ஆட்டத்திலும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு சிறப்பாக விளையாடவில்லை. இந்த இரு ஆட்டங்களிலும் 21, 12 என குறைவான ரன்களில் ஆட்டமிழந்து அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார். மேலும் இந்த போட்டியின் போது அவர் மிகுந்த அழுத்தமாகவும், பலவீனமாக இருந்ததாக தெரிகிறது. டாஸ் வென்று ஒரு சிறந்த முடிவை தேர்வு செய்யவே மிகவும் திணறினார்.

இதனால் அவரது பார்ம் தற்போது குறைந்து கொண்டே வருகிறது. ஒரு வேளை இந்திய அணியின் கேப்டன் பொறுப்பு தொடர்ந்து அளித்து வருவதால் அவருக்கு மிகுந்த அழுத்தம் ஏற்பட்டு இருக்கலாம் என்று தான் தெரிகிறது. இதை வைத்து பார்க்கும்போது அடுத்து வரும் போட்டிகளில் கேப்டன் பதவியில் ரோஹித் நீண்ட நாட்கள் நிலைத்து இருக்க முடியாது என்று கூறப்படுகிறது. இந்த காரணங்களால் இந்திய கிரிக்கெட் நிறுவனம் சரியான முடிவை எடுத்தால் அவர் சிறப்பாக விளையாடுவதற்கான சூழலை ஏற்படுத்தி தந்தால் சிறப்பாக இருக்கும் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் முகமது ஹபீஸ் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here