முதன்முதலாக தன் மகளின் புகைப்படத்தை வெளியிட்ட நடராஜன் – இணையத்தில் வைரல்!!

0

இந்திய அணியின் வேக பந்துவீச்சாளர் நடராஜன் தற்போது தனது மகளின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

நடராஜன்:

ஆஸ்திரேலியா தொடர் மூலம் சர்வதேச போட்டிகளில் அறிமுகமாகி இந்தியா முழுவதும் தனது பெயரை பதிய வைத்தவர் தான் நடராஜன். இவரது பந்து வீச்சு அனைவராலும் கவரப்பட்டது. மேலும் குறுகிய காலத்திலேயே இவர் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்தவர் என்று தான் சொல்ல வேண்டும். தற்போது இந்தியாவிற்கு வந்த இங்கிலாந்து அணி வருகிற 12ம் தேதி முதல் டி20 தொடர்களை விளையாட உள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த டி 20 தொடரில் இந்திய அணியில் நடராஜன் இடம் பிடித்துள்ளார். தற்போது அவர் அதற்காக அடுத்த வாரம் அகமதாபாத்தில் இந்திய அணியுடன் இணையவுள்ளார். தற்போது இந்த நிலையில் அவர் தனது மகளின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும் அந்த புகைப்படத்துடன் அவர் ஓர் கேப்சனையும் பதிவு செய்துள்ளார்.

ஜேஇஇ முதல்நிலை தேர்வு – இன்று தொடக்கம்!!

அவர் கூறியதாவது, நீ எங்கள் வாழ்க்கையில் கிடைத்த மிக அழகான பரிசு, எங்களின் குட்டி தேவதை ஹன்விகா. எங்கள் வாழ்க்கை அதிக மகிழ்ச்சியாக அமைவதற்கு நீ தான் காரணம். எங்களை உன் பெற்றோராக தேர்ந்தெடுத்ததற்கு நன்றி. நாங்கள் உன்னை கடைசி வரை நேசித்துக்கொண்டு இருப்போம் என்று உணர்ச்சி போங்க பதிவிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படத்தை அவரது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here