ஜேஇஇ முதல்நிலை தேர்வு – இன்று தொடக்கம்!!

0

தற்போது இந்தியாவில் அனைத்து பகுதிகளிலும் ஜேஇஇ முதல் நிலை தேர்வு இன்று நடைபெறுகிறது. இதற்காக தற்போது மாணவர்கள் தயார் நிலையில் இருந்து வருகிறார்கள்.

ஜேஇஇ:

தற்போது நாட்டில் அனைத்து பகுதிகளிலும் கொரோனா பரவல் குறைந்து வருகிறது. இதனை முன்னிட்டு அனைத்து பகுதிகளிலும் பள்ளி மற்றும் கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. அதேபோல் அனைத்து வகை தேர்வுகளும் தற்போது தக்க பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது. மேலும் ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயர் கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்புகளை படிப்பதற்காக நுழைவு தேர்வு நடத்தப்படும். அந்த தேர்வு தான் ஜேஇஇ. இந்த ஆண்டு ஜேஇஇ மெயின் தேர்வு 4 முறை நடக்கும் என்று தெரிவித்தனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் அந்த தேர்வுகள் தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் போன்ற 13 மொழிகளில் நடைபெறும் என்றும் அறிவித்தனர். தற்போது முதல் கட்டமாக ஜேஇஇ தேர்வு இன்று முதல் வருகிற 26ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து மீதமுள்ள ஜேஇஇ மெயின் தேர்வுகளை வருகிற மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் தேர்வு நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளனர்.

தமிழகத்திற்கு காவிரி தண்ணீரை கொடுக்க மாட்டோம் – கர்நாடக முதல்வர் அதிரடி!!

இந்த தேர்வை போலவே தற்போது கட்டிடவியலுக்கான இளங்கலை படிப்புக்கும், வடிவமைப்புக்கான இளங்கலை படிப்புக்கான தேர்வும் இன்று நடைபெறுகிறது. இந்த தேர்வு இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. இதற்காக தேசிய தேர்வுகள் முகாமை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்துள்ளது. மேலும் இந்த தேர்வுகளில் கொரோனாவிற்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளையும் பின்பற்றப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here