‘பொதுத்தேர்வை எண்ணி அச்சம் கொள்ள வேண்டாம்’ – மாணவர்களுடன் உரையாற்றும் மோடி!!

0

மாணவர்களுக்கு தேர்வு பாயத்தை நீக்கும் வகையில் நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி மாணவர்களுடன் உரையாட உள்ளார். இதில் கலந்துகொள்ள தற்போது இணையத்தில் விண்ணப்பிக்கலாம்.

பிரதமர் மோடி:

இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே கொரோனாவின் தாக்கம் குறைந்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் சில பகுதிகளில் பள்ளிகள் துவங்கப்பட்டு நடந்து வருகிறது. மேலும் உயர் கல்வி வகுப்புகள் பொதுத்தேர்வு எழுத உள்ளார்கள். இதனால் சில மாணவர்கள் மிக மன உளைச்சலுக்கு உள்ளாகினர். தற்போது மாணவர்களுக்கு தேர்வு குறித்த பயத்தை போக்கும் வகையில் பிரதமர் மோடி மாணவர்களுடன் கலந்துரையாட உள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதில் கலந்துகொள்வதற்கு பள்ளி மாணவர்கள் வருகிற 14ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவித்துள்ளனர். ஆண்டு தோறும் நடைபெறும் வரும் இந்த நிகழ்ச்சி இந்த ஆண்டு வரும் மார்ச் மாதம் இறுதி வாரத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கலந்துரையாடல் ஆன்லைன் மூலம் நடைபெறவுள்ளது. மேலும் இந்த கலந்துரையாடலில் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களும் கலந்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் – எடப்பாடியில் போட்டியிடும் முதல்வர்!

இதற்கு விண்ணப்பிப்பதற்கு www.innovateindia.mygov.in/ppe என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யவேண்டும் வேண்டும் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் தேசிய அளவில் கட்டுரை போட்டி நடத்தப்படுகிறது. இதில் வெற்றி பெறுபவர் பிரதமரிடம் 500 வார்த்தைகளுக்கு மிகாமல் கேள்வி கேக்கலாம் என்றும் அதற்கு பிரதமர் பதிலளிப்பார் என்றும் தெரிவித்துள்ளனர். இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு தற்போது வரை சுமார் 4 லட்சத்து 99 ஆயிரத்து அதிகமான மாணவர்கள் மற்றும் ஒரு லட்சத்து 41 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்களும் விண்ணப்பித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here