இரண்டாவது படத்தில் கமிட்டான பிக் பாஸ் முகின் – படக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பு!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தவர் தான் முகின் ராவ். தற்போது இவர் தனது இரண்டாவது படம் குறித்து அதிகாரபூர்வமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

முகின் ராவ்:

பிபால தனியார் தொலைக்காட்சியில் பிரபலமாக ஓடும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் தான் முகின் ராவ் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சி மூலம் இவருக்கு ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. குறிப்பாக பெண் ரசிகர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமானது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றிகரமாக விளையாடிய முகின் 3வது சீசனில் டைட்டில் வின்னர் பட்டதையும் தட்டி சென்றார். அதன் பின்பு இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியானது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனை உறுதிப்படுத்தும் வகையில் தனது முதல் படமாக வெற்றி என்ற திரைப்படம் மூலம் அறிமுகமாவர் என்று அறிவித்தனர். தற்போது அந்த படம் இன்னும் வெளிவராத நிலையில் முகின் தனது அடுத்த படத்தின் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.  வேலன் என்னும் திரைப்படத்தில் முகின் நடிக்க உள்ளார். தற்போது அதற்கான துவக்க விழாவில் எடுக்கப்பட்டுள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது.

அபாரதத்திற்கு பதில் முத்தம் – போலீஸ் ஆபிசர் அதிரடி சஸ்பெண்ட்!!

இந்த படத்தில் புதுமுக நாயகி நடிக்கப்போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தின் துவக்க விழாவில் பிரபு, சூரி உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர். தற்போது இந்த அறிவிப்பால் முகின் ரசிகர்கள் குஷி அடைந்துள்ளனர். மேலும் முகின் தற்போது தொடர்ந்து இரண்டு படங்களில் பிசியாக இருந்து வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here