கிரிக்கெட்டின் தல MS தோனி பிறந்த நாள்: HappyBirthdayMSDhoni, captaincool ஹாஷ்டேக்கில் ட்விட்டரை அலறவிட்ட ரசிகர்கள்!!!

0

இன்று (07 ஜூலை 2021) மஹேந்திர சிங் தோனியின் பிறந்த நாள் என்பதால் இவர் ரசிகர்கள் சமூக வலைத்தள பக்கங்களில் வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர். தற்போது ட்விட்டரில் #HappyBirthdayMSDhoni, #captaincool ஹாஷ்டேக் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் என்றும் ரசிகர்கள் மனதில் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவராகத் திகழ்பவர் தோனி. கிரிக்கெட் ஜாம்பவானன் ஆன இவர் இன்று தனது 40 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். பல சினிமா நட்சத்திரங்கள், சக வீரர்கள், ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரிடமிருந்து இவருக்கு சமூக வலைத்தள பக்கங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

இவர்களை தவிர இந்திய கிரிக்கெட் வாரியம் (BCCI) தனது சமூக வலைத்தள பக்கத்தில் தோனியை ‘லெஜெண்ட் மற்றும் ஒரு முன் உதாரணம்’ என கூறி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. அதேபோல், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘சூப்பர் பர்த்டே டு நம்ம தல MS தோனி’ என வாழ்த்து தெரிவித்துள்ளது. மேலும் இவர் ரசிகர்களால் தற்போது ட்விட்டரில் #HappyBirthdayMSDhoni, #captaincool ஹாஷ்டேக்குகள் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here