கே.ஜி.எப் 2 படத்தின் ரிலீஸ் அப்டேட் – பிரசாந்த் நீல் ட்வீட்!!!

0
கே.ஜி.எப் 2 படத்தின் ரிலீஸ் அப்டேட் - பிரசாந்த் நீல் ட்வீட்!!!
கே.ஜி.எப் 2 படத்தின் ரிலீஸ் அப்டேட் - பிரசாந்த் நீல் ட்வீட்!!!

கொரோனா தொற்றின் பரவல் அதிகம் இருப்பதால் பல தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகள் அரசால் விதிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகள் அனைத்தும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளத்து. இந்நிலையில் நடிகர் யாஷ் நடிப்பில் தயாராகியுள்ள கே.ஜி.எப். 2 படம் வெளியாகும் தேதி குறித்து அந்த பட குழுவினர் சமூகவலைத்தளத்தில் தெரிவித்துள்ளது.

நடிகர் யாஷின் கே.ஜி.எப்…

கொரோனா தொற்று 2 வது அலையின் தாக்கம் மிகவும் பயங்கரமாக இருந்தது. கொரோனா தொற்று காரணமாக மக்கள் அதிகம் கூடக்கூடிய இடங்கள் அனைத்தும் மூடப்பட்டன. இதில் திரையரங்குகளும் மூடப்பட்டன. இப்பொழுது கொரோனா பரவல் குறைந்து வருவதால் ஊரடங்கு தளர்வுகள் கொஞ்சம் கொஞ்சமாக நீக்கப்பட்டு வருகின்றது. மக்களும் இயல்பு நிலைக்கு திரும்புகின்றனர். இந்நிலையில் கே.ஜி.எப். 2 படத்தின் தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் யாஷ் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் , ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாகி சக்கைபோடு போட்ட படம் கே.ஜி.எப்.

நடிகர் யாஷின் கே.ஜி.எப்...
நடிகர் யாஷின் கே.ஜி.எப்…

இந்த படத்தில் நடிகர் யாஷ் கதாநாயகனாக நடித்தார். மேலும் ஸ்ரீநிதி ஷெட்டி, தமன்னா, மௌனி ராய் மற்றும் பல நடிகர்கள் நடித்துள்ளனர் இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கினார். இந்த படத்தை விஜய் கிரகண்டுர் தயாரித்தார். இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் கே.ஜி.எப் படத்துக்காக இசையமைத்தார். தமிழில் இப்படத்தை புரட்சி தளபதி விஷாலின் விஷால் பிலிம் பேக்டரி (வி எஃப் எஃப்) வெளியிட்டது. இந்த படம் 2018ல் மிக பெரிய வசூல் சாதனை படைத்தது. அதுமட்டுமில்லாமல் இது ஒரு கேங்ஸ்டர் படம் மற்றும் நல்ல கதையும் சண்டைக்காட்சிகளும், விறுவிறுப்பான படமாக இருந்தது. கோலார் தங்க வயலின் பற்றிய படம் ஆகும். இந்த படத்தின் மாபெரும் வெற்றியை கண்டு படத்தின் 2 ஆம் பாகம் எடுக்க திட்டமிட்டது பட குழுவினர்.

கே.ஜி.எப் 2 படம் வெளியாகும் தேதி…

கே.ஜி.எப். 1 வெற்றியை தொடர்ந்து 2 ஆம் பாகம் எடுக்க முடிவு செய்தது பட குழு. கே.ஜி.எப் 2வில் நடிகர் யாஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். இவருடன் சஞ்சய் தத், ரவீனா டண்டன், பிரகாஷ் ராஜ், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கே.ஜி.எப் 2 ஆம் பாகத்தின் படப்பிடிப்புகள் மற்றும் படத்தின் இதர வேலைகள் அனைத்தும் இந்தாண்டு தொடக்கத்திலே முடிந்துவிட்டது. படத்தின் டீசரும் வெளியாகி சாதனை படைத்தது. பின் இந்த படத்தை வரும் ஜூலை 16 ஆம் தேதி வெளியிடப்படும் என்று பட குழுவினர் தெரிவித்தனர்,

ஆனால் ஊரடங்கு மற்றும் கொரோனா 2வது பரவலால் திரையரங்குகள் எதுவும் இன்னும் திறக்கப்படவில்லை இதனால் படம் வெளியாகும் தேதி தள்ளிப்போனது. இந்நிலையில் படத்தின் ரிலீஸ் பற்றி படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் சமூகவலைத்தளமான ட்விட்டரில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் திரையரங்குகளில் கேங்ஸ்டர்கள் நிறைந்திருக்கும் போதுதான் மான்ஸ்டர் வருவார். அனைத்தும் திரையரங்குகள் திறந்தபின் படம் வெளிவரும் திறக்கப்படுவதற்காக காத்திருப்பதாக கூறுவதுபோல் பதிவிட்டுள்ளார். கே.ஜி.எப் 2 ஆம் பாகமும் தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் படம் வெளியாகும்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here