குலுங்கி குலுங்கி சிரித்து ஹார்ட் பீட்டை எகிற வைத்த குட்டி குஷ்பு…!மேக்கப் வீடியோவை வெளியிட்ட ஹன்சிகா!!!

0

தமிழ் சினிமாவில் குட்டி குஷ்புவாக வலம் வருபவர் நடிகை ஹன்சிகா மோட்வானி. அவ்வப்போது அவரின் சமூக வலைதள பக்கங்கள் மூலமாக வெளிவரும் புகைப்படங்களை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருப்பார்கள். அந்த வகையில் தற்போது தன்னுடைய மேக்கப் வீடியோவை வெளியிட்டு அதில் குலுங்கி குலுங்கி சிரித்து ரசிகர்களை சுண்டி இழுத்து  உள்ளார்.

எஸ்கேப் ஃப்ரம் தாலிபான் என்ற ஹிந்தி படத்தின்  மூலம் ஒரு குழந்தை நட்சத்திரமாக தனது வாழ்க்கையை ஆரம்பித்தவர் தான் நடிகை ஹன்சிகா மோட்வானி. குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்துள்ளார். மேலும் வேலாயுதம் படம் மூலம் தமிழ் மக்களுக்கு தனது முகத்தை காட்டியவர். அவரின் தோற்றம் கொழுகொழுவென 90s நடிகை குஷ்பு போல் இருந்ததால் அவரை அனைவரும் குட்டி குஷ்பு என்று அழைத்தனர். இந்நிலையில் அவர் பல படங்களில் பல ஹீரோக்களுடன் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்து உள்ளார்.

இதையடுத்து சமீபத்தில் அவரின் அடுத்த படத்தை பற்றிய தகவல்களை தெரிவித்து இருந்தார். அதாவது, அந்த படத்திற்கு ‘மை நேம் இஸ் ஸ்ருதி’ என பெயர் சுடப்பட்டு உள்ளதாகவும், அந்த படத்திற்கு தயாராவதாகவும் தெரிவித்து இருந்தார். மேலும் இது ஒரு தெலுங்கு படம் ஆகும். இந்நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு மேக்கப் வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் முதலில் லிப்ஸ்டிக் மற்றும் கண்ணுக்கு மை போட்டு கொள்கிறார், அதை தொடர்ந்து குலுங்கி குலுங்கி சிரித்த படி வீடியோ எடுத்து  உள்ளார். அவரின் இந்த சிரிப்பை வைத்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து உள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Hansika Motwani (@ihansika)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here