டெஸ்டில் அதிக தோல்வி பட்டியலில் இணைந்த இந்தியா…, சொந்த மண்ணில் நடந்த சோகம்!!

0
டெஸ்டில் அதிக தோல்வி பட்டியலில் இணைந்த இந்தியா..., சொந்த மண்ணில் நடந்த சோகம்!!
டெஸ்டில் அதிக தோல்வி பட்டியலில் இணைந்த இந்தியா..., சொந்த மண்ணில் நடந்த சோகம்!!

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணி தனது சொந்த மண்ணில் 3வது டெஸ்டில் தோல்வி அடைந்ததை அடுத்து, ஒரு மோசமான சாதனை பட்டியலில் இணைந்துள்ளது.

டெஸ்ட்

கிரிக்கெட்டில் சமீப காலமாக, சர்வதேச அளவில், டெஸ்ட் போட்டிகளையே அதிகம் நடைபெற்று வருகிறது. இந்த வகையில், இந்திய அணியானது தனது சொந்த மண்ணில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில், இந்திய அணி முதல் இரண்டு போட்டியில் வெற்றி பெற்று 2-0 என முன்னிலை பெற்று இருந்த நிலையில், 3வது போட்டியில் தோல்வி அடைந்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதன் மூலம், ஆஸ்திரேலிய அணியானது, பார்டர் கவாஸ்கர் டிராபியை 1-2 என்ற கணக்கில் தக்க வைத்துக் கொண்டுள்ளது. இந்நிலையில், தனது சொந்த மண்ணில் கடந்த 2010 ஆம் ஆண்டுக்கு பிறகு, டெஸ்டில் அதிக தோல்வி அடைந்த அணிகளுக்கான பட்டியல் வெளியாகி உள்ளது. இந்த பட்டியலில், இந்திய அணியானது, ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக தோல்வி அடைந்ததன் மூலம், 6 தோல்வியுடன் 9வது இடத்தில் உள்ளது.

WTC புள்ளிப் பட்டியலில் சரிந்த இந்தியா…, ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக வீழ்ந்ததால் ஏற்பட்ட மாற்றம்!!

இந்த பட்டியலில், பங்களாதேஷ் 23, வெஸ்ட் இண்டீஸ் 22, இங்கிலாந்து மற்றும் இலங்கை தலா 21 தோல்விகளுடன் டாப் ஆர்டரில் இடம் பிடித்துள்ளது. மேலும், தென் ஆப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே தலா 15, ஆஸ்திரேலியா 11, நியூசிலாந்து 10 தோல்விகளுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here