T20 போட்டி என்றாலே சூர்யகுமார் தானா…, எல்லா இடத்திலும் முதலிடம் பிடித்து அசத்தல்!!

0
T20 போட்டி என்றாலே சூர்யகுமார் தானா..., எல்லா இடத்திலும் முதலிடம் பிடித்து அசத்தல்!!
T20 போட்டி என்றாலே சூர்யகுமார் தானா..., எல்லா இடத்திலும் முதலிடம் பிடித்து அசத்தல்!!

நடப்பு ஆண்டு நடைபெற்ற டி20 போட்டிகளில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலிலும் இந்தியாவின் சூர்யகுமாரே முதலிடத்தில் உள்ளார்.

T20 போட்டிகளில் அதிக ரன்கள்:

நடப்பு வருடம் நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடருக்காக, அனைத்து அணிகளும், மற்ற அணிகளுக்கு எதிராக இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே அதிக அளவில் டி 20 தொடர்களில் போட்டியிட்டு வந்தது. இந்த வகையில் இந்திய அணியானது, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, தென் ஆப்பிரிக்கா, அயர்லாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு எதிராக டி20 தொடர்களில் விளையாடியது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மேலும், டி20 உலகக் கோப்பைக்கு ஏதுவாகவே, இந்த வருடம் ஆசிய கோப்பை தொடரும் 20 ஓவர் வடிவில் நடைபெற்றது. இதனால், டி20 போட்டிகளில் வீரர்களின், சாதனை பட்டியல் அதிகரித்து கொண்டே இருந்தது. இந்த வருடம் இறுதி மாதத்தை நெருங்கி உள்ள இந்நிலையில், நடப்பு ஆண்டின் டி20 போட்டிகளில் அதிக ரன்கள் அடித்தவர்களுக்கான பட்டியல் வெளியாகி உள்ளது. இதில், ஐசிசி டி20 பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் நம்பர் 1 ல் இருக்கும் இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் தான், இந்த பட்டியலிலும் முதலிடத்தில் உள்ளார்.

T20 வேர்ல்ட் கப்பில் இந்த நாளை என்னால் மறக்கவே முடியாது…, மனம் திறந்த விராட் கோஹ்லி!!

இவர், நடப்பு வருடம் மட்டும், 31 இன்னிங்ஸில் விளையாடி 1064 ரன்களுடன் 187.43 ஸ்ட்ரைக் ரேட்டை வைத்துள்ளார். இவரை தொடர்ந்து, பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான் 22 இன்னிங்ஸில் 996 ரன்கள் மற்றும் விராட் கோஹ்லி 20 இன்னிங்ஸில் 781 ரன்களுடன் 2 வது மற்றும் 3 வது இடத்தில் உள்ளனர். இவர்களுக்கு அடுத்ததாக, பாகிஸ்தானின் பாபர் அசாம் மற்றும் ஜிம்பாப்வேயின் சிக்கந்தர் ராசா தலா 735 ரன்களுடன் அடுத்த இரு இடங்களில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here