தோனியை மிஞ்ச விராட் கோலி இன்னும் 6 அடிச்ச போதும்…, அது இந்த ஐபிஎல்லில் நிகழுமா??

0
தோனியை மிஞ்ச விராட் கோலி இன்னும் 6 அடிச்ச போதும்..., அது இந்த ஐபிஎல்லில் நிகழுமா??
தோனியை மிஞ்ச விராட் கோலி இன்னும் 6 அடிச்ச போதும்..., அது இந்த ஐபிஎல்லில் நிகழுமா??

ஐபிஎல் தொடரின் 16 வது சீசன், 10 அணிகளுக்கு இடையே கடந்த மார்ச் மாத இறுதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், தற்போது வரை அனைத்து அணிகளும் தலா 13 லீக் போட்டிகளில் விளையாடி முடித்துள்ள நிலையில், பிளே ஆப் சுற்றுக்கான போட்டிகள் கடுமையாக நடைபெற்று வருகிறது. இனி வரும் போட்டிகளின் முடிவை பொறுத்து தான், குஜராத் அணியை தவிர்த்து பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ள அணிகள் குறித்த தெளிவு கிடைக்கும்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த பிளே ஆப் சுற்றுகள் மே 23, 24 மற்றும் 26ம் தேதிகளிலும், இறுதிப் போட்டி மே 28ம் தேதியும் நடைபெற இருக்கிறது. இந்த இறுதிப் போட்டிக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், நடப்பு வருடத்திற்கான ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை எந்த அணி வெல்லும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், ஐபிஎல் அரங்கில் அதிக சிக்ஸர்களை விளாசி எதிரணியை தங்களது பேட்டிங்கால் அச்சுறுத்திய வீரர்களுக்கான பட்டியல் வெளியாகி உள்ளது.

மீண்டும் இந்திய அணியின் கேப்டனான விராட் கோலி?? உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் நிகழ்ந்த அதிரடி மாற்றம்!!

இந்த பட்டியலில், கிறிஸ் கெய்ல் 357 சிக்ஸர்களுடன், சிக்ஸர் மன்னராக திகழ்கிறார். இவரை தொடர்ந்து, மும்பை இந்தியன்ஸின் ரோஹித் சர்மா 255*, RCBயின் ஏபி டி வில்லியர்ஸ் 251, தோனி 239* மற்றும் விராட் கோலி 233* சிக்ஸர்களுடன் டாப் 5 இடத்தை பிடித்துள்ளனர். இதில், தோனியின் சிக்ஸர் சாதனையை முறியடிக்க விராட் கோலிக்கு 6 சிக்ஸர் தான் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here