மீண்டும் இந்திய அணியின் கேப்டனான விராட் கோலி?? உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் நிகழ்ந்த அதிரடி மாற்றம்!!

0
மீண்டும் இந்திய அணியின் கேப்டனான விராட் கோலி?? உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் நிகழ்ந்த அதிரடி மாற்றம்!!
மீண்டும் இந்திய அணியின் கேப்டனான விராட் கோலி?? உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் நிகழ்ந்த அதிரடி மாற்றம்!!

இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் வரும் மே 28ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இந்த தொடருக்கு பிறகு, சர்வதேச இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான இறுதிப் போட்டியில் விளையாட இருக்கிறது. இங்கிலாந்தின் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ள இந்த போட்டிக்காக இரு அணிகளும் தங்களது பயிற்சியை விரைவில் தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதில், இந்திய அணியானது ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு தங்களது பயிற்சியை தொடங்கும் என பிசிசிஐயானது அறிவித்திருந்தது. இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) போட்டிக்கான இந்திய அணியை சமீபத்தில் பிசிசிஐ அறிவித்திருந்தது. இதில், கே எல் ராகுல் காயம் காரணமாக விலகியதால் இஷான் கிஷன் அணியில் இணைக்கப்பட்டார். இருப்பினும், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணிக்கு துணைக் கேப்டனை பிசிசிஐ அறிவிக்காமலேயே இருந்தது.

ஊரே மணக்கும்., கணவாய் மீன் வறுவல்.., இந்த மாதிரி ஒரு தடவை சமைத்து பாருங்க., சுவை அள்ளும்!!

இந்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான போஸ்டர் ஒன்று வெளியாகி உள்ளது. இதில், ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மற்றும் துணைக் கேப்டன்களாக பாட் கம்மின்ஸ் மற்றும் ஸ்டீவன் ஸ்மித் ஒரு புறமும், இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி மறுபுறமும் இடம் பெற்றுள்ளனர். இதனால், ரோஹித் சர்மா இல்லாத நிலையில் இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் விராட் கோலி வழி நடத்துவரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here