மோகன்லால்-கமல் கூட்டணியில் உருவாகும் “மலைக்கோட்டை வாலிபன்” – மாஸாக வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்டர்!!!

0
மோகன்லால்-கமல் கூட்டணியில் உருவாகும்
மோகன்லால்-கமல் கூட்டணியில் உருவாகும் "மலைக்கோட்டை வாலிபன்" - மாஸாக வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்டர்!!!

மலையாள சூப்பர் ஸ்டரான மோகன்லால் பல வெற்றி படங்களில் நடித்து முன்னணி நடிகராக திகழ்கிறார். இது தவிர திரைப்பட தயாரிப்பாளர், திரைப்பட விநியோகஸ்தர், பின்னணி பாடகர் போன்ற பன்முகத்திறமை கொண்டு விளங்குகிறார். மேலும் மோகன்லால், தமிழ் சினிமாவில் விஜயுடன் ஜில்லா படத்திலும், சூர்யாவுடன் காப்பான் படத்திலும் நடித்திருந்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதை தொடர்ந்து தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி கொண்டிருக்கும் ஜெயிலர் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படி இருக்கையில் இப்போது மோகன்லால், கமலுடன் இணைந்து புதிய படத்தில் நடிக்க உள்ளார்.

அதாவது தற்போது லிஜோ ஜோஸ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் “மலைக்கோட்டை வாலிபன் ” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் உலக நாயகன் கமல் ஹாசன் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியானது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ள நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here