இரட்டை சதம் விளாசிய சுப்மன் கில்…, அதிவேக சாதனை பட்டியலில் இணைத்து அபாரம்!!

0
இரட்டை சதம் விளாசிய சுப்மன் கில்..., அதிவேக சாதனை பட்டியலில் இணைத்து அபாரம்!!
இரட்டை சதம் விளாசிய சுப்மன் கில்..., அதிவேக சாதனை பட்டியலில் இணைத்து அபாரம்!!

சுப்மன் கில்லின் அதிரடியான இரட்டை சதத்தால் இந்திய அணி, 349 ரன்களை நியூசிலாந்து அணிக்கு இலக்காக நிர்ணயித்துள்ளது.

IND vs NZ:

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி இன்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து, களமிறங்கிய இந்திய அணியில், ரோஹித் சர்மா (34), விராட் கோலி (8), இஷான் கிஷன் (5) என சொற்ப ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதனை தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் (31), ஹர்திக் பாண்டியா (12), வாஷிங்டன் சுந்தர் (12), ஷர்துல் தாக்கூர் (3) என சீரான இடைவெளியில் விக்கெட்டை இழக்க, மறுபுறம் சுப்மன் கில் மட்டும் எதிரணியின் பந்து வீச்சுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார். இவர், 149 பந்துகளில் 14 பவுண்டரி 9 சிக்ஸர் உட்பட 208 ரன்கள் எடுத்து அசத்தி உள்ளார்.

தென் ஆப்பிரிக்கா மண்ணில் கோல் மழை பொழிந்த இந்தியா…, வெற்றி வாகை சூடி அசத்தல்!!

இதன் மூலம், இவர் ஒருநாள் போட்டிகளில் குறைந்த இன்னிங்ஸில் அதிவேகமாக 1000 ரன்களை கடந்த 2 வது இந்திய வீரர் என்ற பெருமையை அடைந்தார். விராட் கோலி மற்றும் தவான் 24 இன்னிங்ஸில் படைத்த இந்த சாதனையை சுப்மன் கில் 19 இன்னிங்ஸிலேயே படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சுப்மன் கில் இதுவரை, ஒருநாள் அரங்கில் 19 இன்னிங்ஸில் 1102 ரன்கள் அடித்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணி 50 ஓவர் முடிவில், 8 விக்கெட் இழப்புக்கு 349 ரன்களை குவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here