தென் ஆப்பிரிக்கா மண்ணில் கோல் மழை பொழிந்த இந்தியா…, வெற்றி வாகை சூடி அசத்தல்!!

0
தென் ஆப்பிரிக்கா மண்ணில் கோல் மழை பொழிந்த இந்தியா..., வெற்றி வாகை சூடி அசத்தல்!!
தென் ஆப்பிரிக்கா மண்ணில் கோல் மழை பொழிந்த இந்தியா..., வெற்றி வாகை சூடி அசத்தல்!!

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக இந்திய மகளிர் அணி ஏழு கோல் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.

IND vs SA:

சர்வதேச ஆடவர் ஹாக்கி அணியானது உலக கோப்பை தொடரில் கவனம் செலுத்தி வருகிறது. இந்த தொடரில் இந்திய அணி, நாளை வேல்ஸ் அணிக்கு எதிராக மோத இருக்கிறது. இதில், இந்திய அணி வெல்லும் பட்சத்தில், அதிக புள்ளிகளுடன் காலிறுதிக்கு நேரடியாக தகுதி பெறும். இதற்கிடையில், இந்திய மகளிர் அணியானது, தென் ஆப்பிரிக்கா மகளிர் அணிக்கு எதிராக, 4 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட திட்டமிட்டிருந்தது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதன்படி, நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 5-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அசத்தியது. இதனை தொடர்ந்து, 2 வது போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியிலும், இந்திய அணியின் ஆதிக்கமே நிறைந்து இருந்தது. இதில், இந்திய மகளிர் அணி ஆரம்ப முதல் அதிரடியாக விளையாடி தங்களது கோல் எண்ணிக்கை தொடங்கியது.


IND vs NZ: விராட் கோஹ்லியை எப்படி கையாள்வது., நியூசிலாந்து கேப்டன் அதிரடி விளக்கம்!!!

இந்த போட்டியில், உதிதா, வைஷ்ணவி பால்கே, ராணி ராம்பால், சங்கீதா குமாரி, நவ்நீத் கவுர் மற்றும் வந்தனா கட்டாரியா உள்ளிட்டோர் தலா ஒரு கோல் அடிக்க, இந்திய அணி 7-0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வெற்றி பெற்றது. இதில், தென் ஆப்பிரிக்கா அணி, கடைசி வரை கோலுக்காக முயற்சித்து தோல்வியை தழுவியது. இதனால், 4 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி 2-0 என முன்னிலை வகிக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here