நீட் தேர்வு விலக்கு குறித்து முதல்வர் ஆலோசனை., மூத்த அமைச்சர்களுடன் நடந்த திடீர் கூட்டம்!!

0
நீட் தேர்வு விலக்கு குறித்து முதல்வர் ஆலோசனை., மூத்த அமைச்சர்களுடன் நடந்த திடீர் கூட்டம்!!
நீட் தேர்வு விலக்கு குறித்து முதல்வர் ஆலோசனை., மூத்த அமைச்சர்களுடன் நடந்த திடீர் கூட்டம்!!

மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு பெறுவது தொடர்பான, வழக்குகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி உள்ளார்.

ஸ்டாலின் ஆலோசனை:

மேல்நிலைப் பள்ளிக் கல்வியை முடித்து மருத்துவ கல்வி பயில விரும்பும், மாணவர்களுக்கு மத்திய அரசின் சார்பாக அகில இந்திய நுழைவுத் தேர்வான நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வு தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள் தொடர்ந்து எதிர்த்து வருகிறது. தற்போது ஆட்சி அமைத்துள்ள திமுக அரசு, நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு பெறப்படும் என உறுதியளித்திருந்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

ஆனால், இது குறித்து ஆளும் அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையில், இந்த நீட் தேர்வு விலக்கு தொடர்பான வழக்குகள் மற்றும் அவற்றின் தன்மை குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் மூத்த அமைச்சர்களுடன் திடீர் ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன், மா. சுப்ரமணியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here