இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலினா டிரம்ப் தொடர்ந்து பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று டிரம்ப் பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஹைதெராபாத் இல்லத்தில் டிரம்ப்..!
இன்று டிரம்ப் மற்றும் மோடி தலைமையிலான இரு நாடு குழுவினர் பங்கு பெரும் பேச்சுவார்த்தை ஹைதராபாத் இல்லத்தில் நடைபெற்று வருகிறது. இது முடிவடைந்த பிறகு இந்தியாவுடன் புதிய ஒப்பந்தங்கள் உள்ளிட்ட புதிய அறிவிப்புகளை டிரம்ப் மற்றும் மோடி செய்தியாளர்களை சந்தித்து வெளியிட உள்ளனர். அதன் பிறகு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கும் சிறப்பு விருந்தில் டிரம்ப் கலந்து கொள்கிறார்.
பள்ளியில் மெலினா டிரம்ப்..!
டிரம்ப் மனைவி மெலினா டிரம்ப் டெல்லியில் உள்ள ஒரு பள்ளியில் மாணவர்களுடன் ஒன்றாக அமர்ந்து ஜாலியாக பேசி மகிழ்ந்தார். அதன் மூலம் தனது பள்ளிப்பருவ நாட்களை திரும்பி பார்த்தது போன்று உணர்வதாக அவர் தெரிவித்தார்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |