மன்மோகன் சொன்னதையே நாங்கள் செய்தோம் – டெல்லி விவசாயிகள் பிரச்சனை குறித்து மோடி பேச்சு!!

0

வேளாண் சீர்திருத்த சட்டங்களில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சொன்னதையே நாங்கள் செய்திருக்கிறோம் என்றும் வேளாண் சட்டங்களின் அவசியத்தை விவசாயிகள் உணர வேண்டும் எனவும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

மோடி உரை:

குடியரசு தலைவரின் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் போது பிரதமர் மோடி விவசாயிகள் போராட்டம் குறித்தும் வேளாண் சட்டங்கள் குறித்தும் உரையாடினார். அப்போது அவர், “குறைந்த பட்ச கொள்முதல் விலையும், நியாயவிலை கடைகளில் ஏழை மக்களுக்கு குறைந்த விலையில் உணவு தானியங்களை வழங்குவதும் தொடரும் எனவும் கூறினார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் அவர் “வேளாண் சீர்திருத்த சட்டங்களில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியதையே நாங்கள் செய்திருக்கிறோம். வேளாண் சட்டங்களின் அவசியத்தை விவசாயிகள் முழுதாக அறிந்து கொள்ளுமாறு நாம் எடுத்துக்கூறுவது அவசியம், மேலும் விவசாயிகள் போராட்டம் எதற்காக நடந்துகொண்டிருக்கிறது என்பது குறித்து விவாதம் செய்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்” எனவும் கூறினார்.

உத்திரகண்ட் வெள்ளப்பெருக்கு பாதிப்பு – ரிஷப் பாண்ட் நிதியுதவி!!

தொடர்ந்து அவர், இப்பிரச்சனை மீதான விமர்ச்சனங்களை நான் ஏற்றுக்கொள்கிறேன். பாராட்டுகளை எதிர்க்கட்சிகள் பெற்றுக்கொள்ளட்டும். போராடும் விவசாயிகளையும் அவர்களது பிரச்சனைகளையும் பற்றி பேசுபவர்கள் சிறு விவசாயிகளை மறந்து விட்டது வருத்தமளிக்கிறது” என்றும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here