உங்க ஆதார் கார்டில் எந்த மொபைல் எண் இருக்குனு டக்குனு தெரியணுமா? ஈஸியா ஸ்டேப் இதோ!!!

0
உங்க ஆதார் கார்டில் எந்த மொபைல் எண் இருக்குனு டக்குனு தெரியணுமா? ஈஸியா ஸ்டேப் இதோ!!!
உங்க ஆதார் கார்டில் எந்த மொபைல் எண் இருக்குனு டக்குனு தெரியணுமா? ஈஸியா ஸ்டேப் இதோ!!!

மத்திய மாநில அரசுகள் அறிவித்து வரும் அனைத்து வகையான நலத்திட்டங்களுக்கும் ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் எளிய முறையில் ஆதாரில் உள்ள பெயர், முகவரி உள்ளிட்ட சுயவிவரங்களை திருத்தம் மேற்கொள்ள பல்வேறு வசதிகளை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஏற்படுத்தி வருகிறது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அந்த வகையில் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் தெரியாமல் பெரும்பாலானவர்கள் சில அவசர வேலைகளில் சிரமங்களை சந்திக்கின்றனர். உதாரணமாக மின் இணைப்பு, வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் நடவடிக்கைகளில் OTP எந்த நம்பருக்கு செல்லும் என பலரும் குழம்பி இருந்தனர். இது போன்ற சூழ்நிலைகளை தவிர்க்க இந்திய தனித்துவ அடையாள ஆணையம் புதிய வசதியை வழங்கியுள்ளது.

பள்ளிகளுக்கு ஜூன் 20 வரை கோடை விடுமுறையா?? அரசு வெளியிட்ட முழு தகவல் உள்ளே!!

அதன்படி https://myaadhaar.uidai.gov.in/ என்ற இணையத்தளத்தில் Verify Email/Mobile என்ற ஆப்ஷனை கிளிக் செய்து தங்களது ஆதார் எண் மற்றும் செல்போன் எண்ணை உள்ளிட்டு பரிசோதித்து கொள்ளலாம். இந்த ஆதார் எண்ணுடன் உள்ளிட்ட மொபைல் எண் இணைக்கவில்லை என்றால் அறிவிப்பு பலகையில் தெரிவிக்கப்படும். இதில் தங்களது இ-மெயில் ID யையும் பரிசோதித்து கொள்ளலாம். இதன் பின்னர் அருகாமையில் உள்ள இ.சேவை மையங்களை தொடர்பு கொண்டு மொபைல் எண்ணை மாற்றி கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here