எதிர்ப்பு சக்தியை கூட்டும் – மிக்ஸ்டு முளைகட்டிய நவதானிய சூப்

0

முளைகட்டிய பயிறு வகைகள் நம் உடலுக்கு ஊட்டச்சத்துக்களை அளிக்கின்றனர். அதிலிருக்கும் சத்துக்கள் நம் உடலில் நோய் எதிப்பு சக்தியைகூட்டுகிறது. எனவே வாரத்திற்கு ஒரு முறை இது மாதிரியான உணவுகளை சேர்த்து கொள்வது நம் உடலுக்கு மிகவும் நல்லது.

தேவையான பொருட்கள்

How to Grow Bean Sprouts in a Jar | Serious Eats

முளைகட்டிய பயறுகள் – ஒரு கப், வெங்காயம், பூண்டு – 2 பல், சீரகம் ஒரு டீஸ்பூன், தனியா, மிளகு, கொத்தமல்லி தழை, எலுமிச்சைச் சாறு, தேங்காய்ப் பால், புளிக்காத கெட்டி தயிர், உப்பு தேவையான அளவு.

செய்முறை

முளைகட்டிய பயறுகளை வேகவைத்துக் கொள்ளவும். அதன் பின் மிக்ஸியில் வெங்காயம், பூண்டு, தனியா, சீரகம், மிளகு, கொத்தமல்லி தழை, வேக வைத்த பயறு கொஞ்சம் எடுத்து போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும். பிறகு காடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அரைத்த விழுதைப் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கி, அதனுடன் மீதமுள்ள வேக வைத்த பயறை சேர்த்து மேலும் சிறிது நேரம் வதக்கி, தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

Sprouted Moong beans soup/Satvik & zero oil Recipe/ Sprouted green ...

பின்பு தேவையான அளவு உப்பு சேர்க்கவும். அடுப்பை சிறு தீயில் வைத்து, தேங்காய்ப் பால் சேர்த்து, கொதி வரும் போது அடுப்பை அணைத்துவிடவும். பரிமாறுவதற்கு முன் எலுமிச்சை சாறு, நன்கு அடித்த கெட்டித் தயிரை சேர்த்து கப்பில் ஊற்றி, நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும். சூப்பரான முளைகட்டிய நவதானிய சூப் ரெடி.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here