அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கொரோனா தடுப்பூசி – 22ம் தேதி போடப்படும் என தகவல்!!

0

தமிழகத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களுக்கு வருகிற 22 ம் தேதி கொரோனா தடுப்பூசி போடப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அவசர வேலை காரணமாக தடுப்பூசி போடும் தேதி மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி

இந்தியாவில் கடந்த ஜனவரி 17 ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தடுப்பூசி போடுவதில் முதல் கட்டமாக கொரோனா முன்களபணியாளர்களுக்கும், சுகாதாரத்துறையில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தொடர்ந்து பொதுமக்கள் அனைவருக்கும் இரண்டாம் கட்டமாக தடுப்பூசி போடப்படவுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேரகிளிக் பண்ணுங்க!!

தற்போது கொரோனா தடுப்பூசியில் சில பக்கவிளைவுகள் இருப்பதாக தகவல்கள் வெளியானது. தலைவலி, காய்ச்சல், மயக்கம் போன்ற லேசான விளைவுகள் இருப்பதாக 447 பேர் இந்தியாவில் இதுவரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. மேலும் உத்திரபிரதேசத்தில் சுகாதார பணியாளர் ஒருவர் இருந்துள்ளதாகவும் தகவல் வெளியானது.

அமைச்சர் காமராஜூக்கு தீவிர சிகிச்சை – முதல்வர், துணை முதல்வர் நேரில் வருகை!!

இருந்தாலும் தற்போது தமிழகத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வரும் 22 ம் தேதி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கு முன்னதாக இன்று காலை அமைச்சர் விஜயபாஸ்கர் தடுப்பூசி போட்டுக்கொள்வார் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் ஒரு அவசர வேலை நிமித்தமாக அவர் புதுக்கோட்டை செல்லவிருப்பதால் வருகின்ற 22 ம் தேதி தடுப்பூசி போட்டுக்கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here