அனைத்துக்கட்சி கூட்டம் – பிரதமர் மோடி அழைப்பு!!

0

வரும் 29ம் தேதி முதல் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது. தற்போது அதற்காக வரும் 30ம் தேதி அன்று அனைத்து கட்சி கூட்டங்கள் நடைபெறவுள்ளதாகவும் இதற்கு மோடி தலைமை தாங்குவதாகவும் தெரிவித்துள்ளனர். தற்போது அனைத்து கட்சிகளுக்கும் மோடி கூட்டத்திற்காக அழைப்பு விடுத்துள்ளார்.

பட்ஜெட் கூட்ட தொடர்:

தற்போது 2020-2021 ஆண்டிற்கான பட்ஜெட் காலம் முடிவுக்கு வந்துள்ளது. இதனால் 2021-2022 ஆண்டிற்கான பட்ஜெட் கூட்ட தொடர் நடத்த முடிவு செய்துள்ளனர். இந்த கூட்டம் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி நடத்த படும் என்று தெரிவித்துள்ளனர். மேலும் இந்த பட்ஜெட் தாக்கல் கூட்டத்தொடர் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர். முதல் கட்டமாக வரும் 29ம் தேதி முதல் பிப்ரவரி மாதம் 15ம் தேதி வரை தொடரும் என்று தெரிவித்துள்ளனர். மேலும் இரண்டாம் கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 8ம் தேதி முதல் ஏப்ரல் 8ம் தேதி வரை நடைபெற உள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அனைத்து கட்சி கூட்டம்:

முதல் கூட்டத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றுவார், மேலும் அன்று பொருளாதார ஆய்வறிக்கையும் தாக்கல் செய்யப்போவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது பட்ஜெட் கூட்டத்திற்கு முன்பாகவே அனைத்து கட்சி கூட்டம் நடத்த பிரதமர் முடிவு செய்துள்ளார். இதற்காக வரும் 30ம் தேதி அன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என்றும் இதற்கு மோடி தலைமை தாங்க உள்ளார். இதற்காக அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார் பிரதமர் மோடி.

#INDvsENG டெஸ்ட் தொடர் – நடராஜன் நீக்கம்!! முதல் இரண்டு போட்டிக்கான வீரர்கள் பெயர் அறிவிப்பு!!

மேலும் மத்திய பட்ஜெட் வரும் பிப்ரவரி மாதம் 1ம் தேதி அன்று தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளனர். பட்ஜெட் தாக்களுக்கு பின்பு முதல் கட்டமாக பிப்ரவரி மாதம் 15ம் தேதி வரை மற்றும் இரண்டாம் கட்டமாக மார்ச் மாதம் 1ம் தேதி வரையும் கூட்டம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர். மேலும் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றுவதால் மக்களவை நேரம் மாலை 4மணி முதல் இரவு 9 மணி வரை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here