#INDvsENG டெஸ்ட் தொடர் – நடராஜன் நீக்கம்!! முதல் இரண்டு போட்டிக்கான வீரர்கள் பெயர் அறிவிப்பு!!

0

அடுத்த மாதம் முதல் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி 20 தொடர்களை விளையாட இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது இங்கிலாந்து அணி. இதில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிக்கான இந்தியா அணியின் வீரர்களின் பெயர் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. அதில் நடராஜனின் பெயர் இல்லாதது ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளது.

இந்தியா vs இங்கிலாந்து:

தற்போது தான் இந்தியா மற்றும் ஆஸ்திரெலியாவிற்கு எதிரான போட்டிகள் முடிவடைந்துள்ளது. இதில் இந்தியா அணி டி 20 மற்றும் டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளது. ஆஸ்திரேலியா அணி ஒரு நாள் தொடரை கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து இங்கிலாந்து அணி அடுத்த மாதம் முதல் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அதில் 4 டெஸ்ட், 5 டி 20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளை பங்கேற்க உள்ளது. முதலில் டெஸ்ட் போட்டி நடக்கவுள்ளது. முதல் டெஸ்ட் போட்டி வரும் பிப்ரவரி மாதம் 5ம் தேதி தொடங்கவுள்ளது. மேலும் மார்ச் 12ம் தேதி முதல் டி 20 தொடரும் மற்றும் மார்ச் 23ம் தேதி முதல் ஒருநாள் தொடரும் தொடங்கவுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் முதல் இரண்டு டெஸ்ட் போட்டி மட்டும் சென்னையில் உள்ள மைதானத்தில் வைத்து நடக்கப்போவதாக அறிவித்துள்ளனர். இதனால் சென்னை ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர். தற்போது முதல் இரண்டு டெஸ்ட் போட்டிக்கான இந்தியா அணியின் வீரர்களின் பெயர் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. அது சற்று அதிர்ச்சி அடையச்செய்துள்ளது. தற்போது காயம் காரணமாக ஜடேஜா, ஷமி, புவனேஷ்வர், உமேஷ் யாதவ் இடம்பெறவில்லை. அதேபோல் காலில் காயம் ஏற்பட்டதால் சைனியும் இங்கிலாந்து தொடரில் இடம்பெறவில்லை.

நடராஜன் நீக்கம்:

மேலும் ஆஸ்திரேலியா தொடர் மூலம் சர்வதேச போட்டியில் அறிமுகமான தமிழக வீரர் நடராஜன் இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இவரது பெயர் இடம்பெறவில்லை. மேலும் இவர் டி 20 தொடருக்கான வீரர் என்று தெரிவித்துள்ளனர். ஆகையால் தான் இவரை டெஸ்ட் தொடரில் சேர்க்கவில்லை என்றும் காரணமும் தெரிவித்துள்ளனர். ஆனால் இவர் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் சிறப்பாக பந்துவீசி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பப்ஜி விளையாட இதை மட்டும் செய்தால் போதும் – போனிலேயே விளையாடலாம்!!

இந்திய அணியின் வீரர்கள் பெயர்:

விராட் கோலி, ரோஹித் சர்மா, சுப்மன் கில், மயங்க் அகர்வால், புஜாரா, ரஹானே, ரிஷாப் பாண்ட், சாகா, பாண்டியா, கே.எல் ராகுல், பும்ரா, இஷாந்த் சர்மா, சிராஜ், தாக்கூர், அஸ்வின், குல்தீப், வாஷிங்க்டன் சுந்தர், அக்சர் பட்டேல்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here