மருத்துவர் பரிந்துரை இல்லாமலே கொரோனா பரிசோதனை மேற்கொள்ளலாம் – மத்திய சுகாதாரத்துறை!!

0
corona test
corona test

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை அதிகரித்து வரும் நிலையில் அதனால் குணமடைபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதற்கிடையே மருத்துவர் பரிந்துரை இல்லாமலேயே கொரோனா பரிசோதனை செய்துகொள்ளலாம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

கொரோனா தொற்று

நாடுகள் எங்கிலும் கொரோனா தொற்று  பரவி வருகிறது. இதனால் உலக பணக்காரநாடுளே பீதி அடைந்துள்ளனர். இந்தியாவிலும் இந்த கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்த கொரோனா தொற்றால் மார்ச் மாதத்தில் 24 இருந்து இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது. தற்போது பல தளர்வுகளுடன் செப்டம்பர் 30 வரை இந்த ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது.

corona test
corona test

தற்போது இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 39,36,747 உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 69,561 ஆக உயர்ந்துள்ளது. மேலும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 37,01,223 ஆக உயர்ந்துள்ளது. இதனால் பாதிப்பு அதிகரித்தாலும் குணமடைபவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து வருகிறது.

ministry of health and welfare
ministry of health and welfare

இதனால் மக்கள் நலனை கருத்தில் கொண்டு பல தளர்வுகள் போடப்பட்டது. இதில் மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்துகள் தொடங்கப்பட்டதால் பயணம் செய்பவர்கள் மருத்துவரின் பரிந்துரைப்படி பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. ஆனால் தற்போது மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமலே கொரோனா பரிசோதனை செய்துகொள்ளலாம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதனால் பயணம் செய்பவர்கள், விருப்பமுள்ளவர்கள் என யார் வேண்டுமானாலும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here