ஈஸியான, சுவையான பன்னீர் ரோல் – வீட்டிலேயே எப்படி செய்றதுன்னு பாப்போம்!!

0
bread paneer role

அசைவ உணவுகள் சாப்பிடாதவர்களுக்கு பன்னீர் ஒரு விருப்பமான உணவு ஆகும். பன்னீர் அசைவத்திற்கு இணையான ஒரு உணவு. இதில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால் பற்கள் மற்றும் எலும்புகளுக்கும் நல்லது. மேலும் இதனை குழந்தைகளும் விரும்பி உண்ணும் உணவாக உள்ளது. இது சருமத்தை கூட பளபளப்பாக்கும். இப்பொழுது இந்த பன்னீரை வைத்து எளிமையான ரெசிபி எப்படி செய்வது என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

paneer-bread-roll-recipe02
paneer-bread-roll-recipe

பன்னீர் – 200 கிராம்

பிரட் துண்டுகள் – 4

பெரிய வெங்காயம் – 2

முட்டை – 2

பச்சை மிளகாய் – 2

மிளகாய்த்தூள் – 2 தேக்கரண்டி

மஞ்சத்தூள் – 2 தேக்கரண்டி

கரம் மசாலா – 2 தேக்கரண்டி

உப்பு தேவையான அளவு

எண்ணெய் தேவையான அளவு

கொத்தமல்லி சிறிதளவு

செய்முறை

வாணலியில் எண்ணெய் ஊற்றி அதில் பச்சை மிளகாய் , பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். அதன்பின் அதில் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து வதக்கி துருவிய பன்னீரை சேர்த்து வதக்கவும். பிறகு கொத்தமல்லி தூவி இறக்கி அதனை ஆறவைக்கவும்.

paneer
paneer

இப்பொழுது நாம் எடுத்துவைத்துள்ள பிரட் துண்டுகளை எடுத்து அதன் ஓரங்களை வெட்டி எடுத்துக்கொள்ளவும். பிரட் துண்டுகளை எடுத்து சப்பாத்தி கட்டையில் வைத்து தேய்க்கவும். அதன்பின் நாம ஆறவைத்துள்ள பன்னீர் மசாலாவை எடுத்து பிரட்டில் வைத்து உருட்டவும். அதன் மேற்பகுதியில் மைதா மாவை தண்ணீரில் கலந்து தடவினால் பிரியாமல் இருக்கும்.

bread paneer role
bread paneer role

இப்பொழுது முட்டையை அடித்து கொள்ளவும். அதன்பின் பிரட் crumbs ஒரு தட்டில் எடுத்துக்கொள்ளவும். இப்பொழுது உருட்டி வைத்தவற்றை முட்டையில் நனைத்து பிரட் crumbs இல் பிரட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால் பன்னீர் ரோல் தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here