ஜல்லிக்கட்டு காளைகளுக்கு இன்சூரன்ஸ் – அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பு!!

0

பொங்கலை முன்னிட்டு நடத்தப்படும் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளுக்கு காப்பீடு செய்யப்படப்போவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.

காளைகளுக்கு காப்பீடு

கொரோனா ஊரடங்கு காலத்தில் தமிழக அரசு பல தளர்வுகளை கொண்டுவந்த நிலையில், பொங்கல் பண்டிகையை ஒட்டி நடத்தப்படும் ஜல்லிக்கட்டு பாரம்பரிய விழாவுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கூடிய விதிமுறைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் இதுவரை இல்லாத விதமாக முதன் முறையாக தமிழக அரசு ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளுக்கு காப்பீடு செய்யப்போவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் எம்.ஜி.ஆர் பிறந்தநாளை முன்னிட்டு வருகிற 17ம் தேதி அதிமுக சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவுள்ளது. இந்த போட்டியின் முதல் நிகழ்வாக கால் கோல் நடும் விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்துகொண்டு கால் கோல் நட்டு வைத்தார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் , காளைகளுக்கான காப்பீடு பற்றி கூறினார்.

‘ஸ்டாலின் முதலில் அவரது குடும்ப பிரச்னையை தீர்க்கட்டும்’ – அமைச்சர் உதயகுமார் பேட்டி!!

அமைச்சரின் இந்த அறிவிப்பால் ஜல்லிக்கட்டு காளையின் உரிமையாளர்கள் சந்தோஷத்தில் உள்ளனர். மேலும் பாலமேடு, அலங்காநல்லூர் பகுதிகளிலும் ஜல்லிக்கட்டு நடை பெரும் எனவும், அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டுதலின் படியும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here