கரூரில் ஏழை மக்களுக்கு 3 வேலை உணவு வழங்கும் திட்டம் – அமைச்சர் தொடங்கி வைப்பு!!

0

தமிழகத்தில் தற்போது புதிதாக பதவியேற்றுள்ள அமைச்சர்கள் பல்வேறு திட்டங்களை துவக்கி வைத்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி புதிய திட்டம் ஒன்றை துவக்கி வைத்துள்ளார்.

உணவு வழங்கும் திட்டம்:

தமிழகத்தில் தற்போது நாளுக்கு நாள் கொரோனா நோய்த்தொற்றின் பாதிப்பு கட்டுக்குள் அடங்காமல் வீரியத்தை செலுத்து வருகிறது. இதனால் பல தரப்பு மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் பல தரப்பினர் தங்களது அன்றாட உணவிற்கு அவதிப்பட்டு வருகின்றனர்.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் சில சமூக ஆர்வலர்கள் இலவசமாக மக்களுக்கு உணவினை வழங்கி வருகின்றனர்.மேலும் மக்கள் அனைவரும் பயனடையும் வகையில் ஊரடங்கு காலத்தில் அம்மா உணவகம் செயல்படும் என்றும் அரசு மருத்துவமனைகளில் 3 நேரமும் உணவு வழங்கப்படும் என்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்தியாவில் ஒரே நாளில் 3,62,727 பேருக்கு கொரோனா தொற்று – 4,120 பேர் பலி!!

தற்போது அந்த வகையில் கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஓர் புதிய திட்டத்தை துவக்கி வைத்தார். அதன்படி கரூரில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு 3 வேலையும் உணவு வழங்கும் திட்டத்தை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார். அதுமட்டுமல்லாமல் இவர் சட்டமன்ற அலுவலகத்தில் பணியை தொடங்கிய 100 பேருக்கு அன்னதானம் வழங்கினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here