தரமற்ற, எடை குறைந்த ரேஷன் அரிசி – பெண் புகாரால் ‘புல்லட்டில் கிளம்பிய செல்லூர் ராஜு’

0
minister sellur raju
minister sellur raju

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் விலையின்றி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மதுரை மாவட்டத்தின் ஒரு பகுதியில் தரமற்ற மற்றும் எடை குறைந்த ரேஷன் அரிசி வழங்கப்படுவதாக பெண் ஒருவர் அளித்த புகாரினால் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு இருசக்கர வாகனத்தில் உடனடியாக புறப்பட்டு சென்று எடுத்த அதிரடி நடவடிக்கை அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

ரேஷன் பொருட்கள்:

தமிழகத்தில் இன்று முதல் ஐந்தாம் கட்ட ஊரடங்கு (அன்லாக் 1.0) அமலுக்கு வருகிறது. இதைத் தொடர்ந்து பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டு உள்ளது. கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அத்தியாவசிய பொருட்கள் வழங்கி உதவி செய்து வருகின்றனர். இந்நிலையில் மதுரை பெத்தானியாபுரம் பகுதியில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு அவர்கள் அதிமுக சார்பில் கொரோனா நிவாரணப் பொருட்களை வழங்கி வந்தார்.

அப்பொழுது அந்தப் பகுதியில் இருந்த ரேஷன் கடையில் இலவச அரிசி வழங்கப்பட்டு வந்தது. அங்கு தரமற்ற மற்றும் எடை குறைவான அளவில் அரிசி வழங்கப்படுவதாக அமைச்சர் செல்லூர் ராஜுவிடம் பெண் ஒருவர் நேரடியாக புகார் அளித்தார். இதனால் உடனடியாக அதிகாரிகளுடன் இரு சக்கர வானகத்தில் (புல்லட்) சம்பவ இடத்திற்கு சென்ற அமைச்சர் அங்கு ஆய்வு செய்தார். எடை குறைவாக இருந்ததை உறுதி செய்த அமைச்சர் செல்லூர் ராஜு ரேஷன் கடை பணியாளரை உடனடியாக பணிநீக்கம் செய்தார்.

பல்வேறு ரேஷன் கடைகளில் இது மாதிரி முறைகேடு புகார்கள் வரும் காரணத்தால் இனிமேல் அடிக்கடி சோதனைகள் நடத்தப்படும் என கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்து உள்ளார்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here