இந்தியாவில் தொடங்கிய பயணியர் ரயில் போக்குவரத்து – தினமும் 200 ரயில்கள்..!

0
train
train

கொரோனா பரவலால் இந்தியா முழுவதும் கடந்த மார்ச் 23ந் தேதி முதல் ஊரடங்கு போடப்பட்டது. இந்தியாவில் மார்ச் மாதம் முதல் ரயில் பேருந்து விமானம் என அணைத்து சேவையும் நிறுத்துவைக்கப்பட்டது.மே 12ம் தேதி முதல் பயணிகள் வசதிக்காக ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள்  மற்றும் டில்லியிலிருந்து 15 நகரங்களுக்கு 30 சிறப்பு ரயில்கள் மட்டுமே ‘ஏசி’ ரயில்களை இயக்கி இருந்த நிலையில் 3இன்று கூடுதலாக 200 பயணிகள் சிறப்பு ரயில் சேவை கூட்டியுள்ளது.

200 சிறப்பு ரயில்கள்

நாடு முழுவதும் கொரோனா பரவலால் 5 ஆம் கட்ட ஊரடங்கு ஜூன் 30 ஆம் தேதி வரை நீடிக்கப்படுகிறது என்று மத்திய அரசு அறிவித்தது. ஜூன் 1 தேதி முதல் 30 தேதி வரை படிப்படியாக தளர்வுகளுக்கான அறிபவிப்புகள் UNLOCK 1.0 என்ற அடிப்படையில் வெளியிடப்படும் என்று தெரிவித்திருந்தது. அதன்படி, தமிழகத்திலும் ஜூன் 30 வரை ஊரடங்கு தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனிடையே 4 ம் கட்ட ஊரடங்கில் தளர்வுகளின்படி, சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.இதுகுறித்து ரயில்வே நேற்று வெளியிட்ட அறிக்கையில் ஏற்கனவே இயக்கப்பட்டு வரும் ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் மற்றும் மே 12ம் தேதி முதல் இயக்கப்பட்டு வரும் 30 சிறப்பு ஏசி ரயில்களுடன் கூடுதலாக 200 பயணிகள் சிறப்பு ரயில்கள் ஜூன் 1 முதல் இயக்கப்படும்.

ஜூன் 1 முதல் 30 வரை சிறப்பு ரயில்களில் பயணம் செய்வதற்காக இதுவரை 26 லட்சம் பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர் முதல் நாளில் 1.45 லட்சம் பயணிகள் பயணம் செய்வார்கள். பயணிகள் ஒன்றரை மணி நேரத்துக்கு முன்பாக ரயில் நிலையத்துக்கு வரவேண்டும்.  கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். வைரஸ் பாதிப்புக்கான அறிகுறி இல்லாதவர்கள் மட்டுமே, ரயிலில் பயணிக்க அனுமதிக்கப்படுவர். இவ்வாறு, அவர் கூறினார்.டிக்கெட் அல்லது ஆர்ஏசி டிக்கெட் வைத்திருப்பவர்கள் மட்டுமே ரயில் நிலையம் மற்றும் ரயிலில் செல்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

ரயில் வாரியத்துக்கு தமிழக அரசு கோரிக்கை

தமிழகத்துக்கு எந்த ரயில் சேவையும் அறிவிக்கப்படவில்லை. அதனால் தமிழகத்திற்கு ஏசி வசதி இல்லாத 4 சிறப்பு ரயில்களை இயக்குமாறு ரயில்வே வாரியத்திற்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்தது.கோரிக்கையை ஏற்று தமிழகத்தில் கோவை-காட்பாடி, கோவை-மயிலாடுதுறை, மதுரை-விழுப்புரம், திருச்சி-நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்கள் இயக்குமாறு தமிழக அரசு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், தமிழகத்தில் அந்த வழித்தடத்தில் 4 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது. அதன்படி, கோவை – மயிலாடுதுறை, மதுரை-விழுப்புரம் விரைவு ரெயில், திருச்சி-நாகர்கோவில் விரைவு ரெயில், கோவை-காட்பாடி விரைவு ரெயில் ஆகிய ரயில்கள் இன்று முதல் இயக்கப்பட உள்ளன.

மதுரை-விழுப்புரம், நாகர்கோவில்-திருச்சி இடையே சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில்கள் தினமும் இயக்கப்பட உள்ளன.இன்று முதல் இயக்கப்படும் 4 சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு கடந்த இரு தினங்களுக்கு முன்பாக தொடங்கியது. மண்டலம் விட்டு மண்டலம் செல்ல ரயில்களில் பயணித்தால் இ-பாஸ் பெறுவது கட்டாயம் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும் ரயில் புறப்படுவதற்கு 90 நிமிடங்களுக்கு முன் ரயில் நிலையத்திற்கு வரவேண்டும். பயணச்சீட்டு உள்ள பயணிகள் மட்டுமே ரயில் நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். ரயில் பயணிகள் உணவு மற்றும் இதர உணவுப்பொருட்களை வீட்டிலிருந்தே கொண்டு வர அறிவுறுத்தல் அளிக்கப்பட்டுள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here