பிரபலத்தின் ட்விட்டர் கணக்கு முடக்கம் …! – அமைச்சருக்கே சட்டத்தை காரணம் சொல்லிய நிறுவனம்  !!!

0

சமீபகாலமாக சில முக்கிய பிரபலத்தின் ட்விட்டர் கணக்குகளை அந்த நிறுவனம் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி முடக்கி வருகிறது. அந்த வரிசையில் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தின் ட்விட்டர் பக்கம் சில ட்விட்டரின் சட்டக் காரணங்களுக்காக நிறுத்தப்பட்டு ,பின்னர் ஒரு மணி நேரம் கழித்து  மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

மத்திய அரசு ட்விட்டர் ,பேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற சமூக  வலைத்தளங்களுக்கு ஒரு புதிய சட்ட  திட்டங்களை விதித்து இருந்தது. இந்த விதிகளை பின்பற்றாவிட்டால் அந்த நிறுவனங்களுக்கு எந்த வித சட்ட பாதுகாப்பு வழங்க முடியாது என்று மத்திய அரசு  தெரிவித்து இருந்தது. இந்த அறிவிப்பை பல சிரமங்களுக்கு பிறகு ஒத்துக்கொண்டது ட்விட்டர் நிறுவனம்.

இந்நிலையில் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தின் ட்விட்டர் கணக்கை ட்விட்டர் நிறுவனம் முடக்கி உள்ளது. இது குறித்து கருத்து  தெரிவித்த அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், அமெரிக்க டிஜிட்டல் பதிப்புரிமை சட்ட விதிகளை பின்பற்றாததால் தனது கணக்கை ட்விட்டர் நிறுவனம் முடக்கியதாகவும் , ஒரு மணி நேரத்திற்கு பிறகு தனது கணக்கை பயன்படுத்த அனுமதித்தாகவும் கூறியுள்ளார். இது குறித்த முன்னறிவிப்பு ஏதும் அந்த நிறுவனம் சார்பில் தனக்கு தரவில்லை என்றும் கூறியுள்ளார். மேலும் இத்தகைய செயல் இந்தியாவின் புதிய தகவல் தொழில்நுட்ப சட்டங்களுக்கு மிகவும் எதிரானவை என்று கூறியுள்ளார்.

இது குறித்து ட்விட்டர் தரப்பில் கூறியதாவது, புகார் வந்ததன் அடிப்படையிலையே அவரின் கணக்கு முடக்கம் பட்டதாகவும் , அதன் பின்னர் ஒரு மணி நேரத்திற்கு  பிறகு அவரின் கணக்கை பயன்படுத்தும் வகையில் அளித்ததாகவும் கூறியுள்ளது. மேலும் இது போல பல பிரபலங்களின் ட்விட்டர் கணக்குகள் அல்லது அதில் இருக்கும் சிறப்பு அம்சங்களை ட்விட்டர் நிறுவனம் நீக்கி  பின்னர் அதை செயல்பட வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here