டிச. 21ம் தேதி 397 ஆண்டுகளுக்கு பிறகு வானில் நிகழவிருக்கும் அதிசயம் – வானியலாளர்கள் தகவல்!!

0

விண்வெளியில் உள்ள சூரியகுடும்பத்தில் 397ஆண்டுகளுக்கு பின்னர் 2 கோள்கள் நெறுக்கமாக இணைய உள்ளதாக கூறப்படுகிறது. இந்த வருடம் நிகழவிருக்கும் இந்த இணைப்பு 1623ம் ஆண்டு நிகழ்ந்த இணைப்பை விட மிக பெரிய இணைப்பு என்று பிர்லா கோளரகத்தின் இயக்குனர் கூறுகிறார்.

வியாழன் – சனி நெருக்கம்:

சூரிய குடும்பத்தில் 8 கோள்கள் உள்ளன. புதன் வெள்ளி, புவி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகும். இதில் 5வது கோள் வியாழனும், 6வது கோள் சனியும், டிசம்பர் 21ம் தேதி மிக நெருக்கமாக காணப்படும், அவை பார்ப்பதற்கு ஒரு நட்சத்திரத்தை போல் காட்சியளிக்கும் என விண்வெளி அறிஞர்கள் கூறுகிறார்கள். 1623ம் ஆண்டுக்கு பிறகு எந்த கோள்களும் நெருக்கமாக சந்தித்தது இல்லை.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அவ்வாறு நெருங்குவதை இணைப்பு என்கிறார்கள். ஆனால் இந்த வருடம் நிகழும் இந்த இணைப்பு பெரிய இணைப்பாகும். இது டிசம்பர் 21ம் தேதி நிகழும், இதை உலகின் தென்மேற்கு திசையிலிருந்து காணமுடியும்.  இதன் அடுத்தகட்டமாக 2080 மார்ச் 15ல் நிகழலாம் என அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள். ஆனால் அந்த இணைப்பு டிசம்பர் 21ல் ஏற்படுவதை விட குறைவான இணைப்பாகவே இருக்கும் என தெரிவித்தனர். இந்த நிகழ்வை இந்தியாவில் உள்ள பெரும்பாலான நகரங்களில் சூரியன் ஆஸ்தமானத்துக்கு பிறகு காணலாம் என கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here