வீட்டுக் காவலில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்?? கட்சியினர் குற்றச்சாட்டு!!

0

டெல்லி போலீசார் ஆம் ஆத்மி கட்சியினை சேர்ந்தவர்கள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க விடாமல் செய்கின்றனர் என்றும் அவரை வீட்டில் “ஹவுஸ் அர்ரெஸ்ட்” செய்து வைத்துள்ளதாகவும் தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

ஆம் ஆத்மி கட்சி:

டெல்லியில் சுயேட்சை கட்சியாக செயல்படுகிறது, ஆம் ஆத்மி கட்சி. இதன் தலைவராக தற்போது இருப்பவர், அரவிந்த் கெஜ்ரிவால். அவரது ஆட்சி தான் தலைநகர் டெல்லியில் நடந்து கொண்டு இருக்கின்றது. அவரது சிறப்பான நேர்மையான ஆட்சி காரணமாக பலரும் அவருக்கு ஆதரவாக உள்ளனர். இந்த கொரோனா காலகட்டத்தில் அவர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தலைநகரில் கடந்த 13 நாட்களாக அரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து விவசாயிகள் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று இந்த போராட்டம் நடைபெறுகிறது. விவசாயிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால், அனைத்தும் தோல்வி அடைந்தது. இந்த போராட்டத்திற்கு பல அரசியல் தலைவர்கள் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். அதே போல் தான் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரான அரவிந்த் கெஜ்ரிவாலும் தெரிவித்து இருந்தார்.

டிச. 21ம் தேதி 397 ஆண்டுகளுக்கு பிறகு வானில் நிகழவிருக்கும் அதிசயம்!!

இப்படியான சூழலில் ஆம் ஆத்மி கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் முதலவர் அரவிந்த் கெஜ்ரிவால் போலீசாரால் “ஹவுஸ் அர்ரெஸ்ட்” செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவித்துள்ளனர். இது குறித்த ஒரு வீடீயோவினையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர். அதில் போலீசார் அனைவரும் அவர்களை யாரையும் கடந்த திங்கள்கிழமையில் இருந்து சந்திக்கவிடவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். அவர் நேற்று விவசாயிகளை சந்தித்ததற்கு பின் இவ்வாறாக போலீசார் செய்து வருகின்றனர் என்ற குற்றசாட்டினையும் வைத்துள்ளனர். இன்று விவசாயிகள் தங்களது போராட்டத்திற்கு ஆதரவாக “பாரத் பந்த்” அழைப்பு விடுத்தனர் என்பது சுட்டிக்காட்டபட வேண்டிய ஒன்று.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here