எனக்கு தெரியாமல் சூரப்பாவை விசாரிக்க குழுவா?? தமிழக ஆளுநர் அதிருப்தி!!

0

அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா அவர்களை விசாரிக்க தனி குழு அமைத்தது தனக்கு அதிருப்தியாக இருப்பதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கூறியுள்ளார். சூரப்பா அவர்கள் கிட்டத்தட்ட 200 கோடி நிதி மோசடி செய்ததாகவும், இதனால் அவரை விசாரிக்க வேண்டும் என்பதற்காக தமிழக அரசு சார்பில் தனி குழு அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதற்காக, ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் உயர்கல்வித்துறை சார்பில் கடந்த மாதம் குழு அமைக்கப்பட்டது. ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கடந்த மாதம் கடிதம் ஒன்றை முதல்வருக்கு அனுப்பியுள்ளார்.

அதில், சூரப்பா அணைத்து பல்கலைக்கழகங்களுக்கும் துணை வேந்தர் ஆக பதவி வகித்தவர் என்பதால், அவரின் நன்னடக்கத்தை பாராட்டும் வகையில் அவரை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக நியமித்ததாகவும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கூறியுள்ளார். இதனையடுத்து, திடீரென்று எனக்கு தெரியாமல் இந்த குழு அமைத்து சூரப்பாவை விசாரிப்பது எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் 100% இருக்கைகள்!!

தலைமை செயலக வட்டாரங்களும் மற்றும் ஆளுநர் தரப்பு வட்டாரங்களும் இந்த கடிதத்தை உறுதிபடுத்தி உள்ளன. மேலும் விரைவில் சூரப்பாவின் விசாரணையை முடித்துக்கொள்ள வேண்டும் என ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வலியுறுத்தி கூறியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here